எங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்...! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
சென்னை: அதிமுக அரசின் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டியதோடு, நாடளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போதும் அதனை அவர் குறிப்பிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற காவிரி கூக்குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். ஜக்கி வாசுதேவ் காவிரி கூக்குரல் என்ற பெயரில் தலைக்காவிரியில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பயணத்தை இன்றுடன் முடித்தார். அது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கடந்த 2011-ல் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சுற்றுச்சுழலை காப்பதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்துவதாக கூறினார். மேலும், பவானி, நொய்யல், அமராவதி, வைகை ஆறுகளை மாசடையாத வகையில் புனரமைக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.
வேளாண்துறை மூலம் நடப்பு ஆண்டில் மட்டும் இரண்டரை கோடி பனை விதைகளை நட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் மரங்களை நட இளைஞர்களும், மாணவர்களும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் ஜக்கி வாசுதேவ் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கும் எனவும் உறுதியளித்தார்.
விழாவில் எந்த இடத்திலும் மறந்தும் கூட ஜக்கி வாசுதேவின் பெயரை முதல்வர் உச்சரிக்கவில்லை. சத்குருஜி..சத்குருஜி என்று மட்டும் தான் திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தார்.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications