Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்பை ஜப்பான்.. சென்னை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நிறைவடைந்த 9 நாள் வெளிநாட்டு பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் பயணத்தை நிறைவு செய்து டோக்கியோவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார்.

2024 ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

TN CM MK Stalin departed from Japan Tokyo airport will arrive Chennai at night

கடந்த மே 23 ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், கடந்த மே 24 ஆம் தேதி அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். இந்தியா - சிங்கப்பூர் இடையிலான வர்த்தக மற்றும் தொழில்துறையை சார்ந்த 350 க்கும் அதிகமான வணிக நிறுவன பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள்.

அதை தொடர்ந்து சிங்கப்பூரை சேர்ந்த முக்கிய நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டார். அத்துடன் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய நிகழ்வுகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். மே 25 ஆம் தேதி ஜப்பான் நாட்டிற்கு சென்ற ஸ்டாலின், தலைநகர் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய நகரங்களுக்கு சென்றார்.

ஜப்பான் நாட்டின் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் 6 ஜப்பான் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் தொடங்க ரூ.818 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

கடைசியாக ஜப்பானின் மருத்துவ உபகரண நிறுவனமான ஓம்ரான், தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க ரூ.128 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் 9 நாள் பயணம் நிறைவடைந்ததை அடுத்து தலைநகர் டோக்கியோவில் இருந்து அவர் புறப்பட்டார்.

சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின், இன்று இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னைக்கு புறப்பட்டபோது, டோக்கியோ விமான நிலையத்தில் ஜப்பான் நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. சிபி ஜார்ஜ் அவர்கள் வழியனுப்பி வைத்தார்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+