பிறந்து 80 நாளே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை.. பரிதவித்த பெற்றோர்.. முதல்வர் ஸ்டாலின் செய்த பேருதவி
சென்னை: பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசித்து வருபவர்கள் வசந்த்-அகல்யா தம்பதியினர்.
அகல்யாவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சில நாட்களில் டாக்டர்கள் சொன்ன செய்தி வசந்த்-அகல்யா தம்பதியியனரை தூக்கி வாரிப் போட்டது..
அதாவது வருண் என்ற அந்த பச்சிளம் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினை இருக்கிறது. அதனால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்ற செய்திதான் அது. இதனால் இந்த தம்பதியினர் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை சென்னை கொண்டு வந்தனர். இதய அறுவை சிகிச்சை செய்தால் அதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும். பணத்திற்கு எங்கே செல்வது? என்று இருவரும் வாடி வதங்கினர்.

இதனை தொடர்ந்து பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பிறந்து 80 நாட்களை கடந்து விட்ட அந்த குழந்தையை இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரி சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் குழந்தைக்காக பண உதவி செய்யும்படி வேண்டுகோள் எழுந்தது.
இதனை பார்த்த பெரும்பாலானோர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தங்களால் முடிந்த பண உதவி செய்தனர். இந்த உதவி செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காதுகளுக்கும் எட்டியது. இதனை தொடர்ந்து குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் வசந்த் - அகல்யா தம்பதியினருக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை வ.வருண் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்த்துள்ள செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
இந்தக் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தையின் நிலையை அறிந்து உடனடியாக நிதியுதவி செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் உள்பட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications