காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்.. மக்களுக்கும் கோரிக்கை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார்.
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார்.அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ள மு.க ஸ்டாலின், தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை எட்டப்போகிறது. தமிழகத்தில் தினசரியும் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

கொரோனாவை வெல்லும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 150 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய முன்களப்பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
பூஸ்டர் டோஸ் செலுத்திய பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன்.
அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவல், தடுப்பூசி செலுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications