எதிர்க்கட்சி தலைவராக தேர்வான ராகுல் காந்தி.. சில நிமிடங்களில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்
சென்னை: லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக முத்ல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய பொறுப்பை ஏற்கும் அன்பு சகோதரர் ராகுலை இந்தியா வரவேற்கிறது. மக்களுக்கான அவையில் ராகுல் காந்தியின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது.

இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. எதிர்க்கட்சி தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியது. இது தொடர்பாக தொடர் ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சி நடத்தி வந்தது. இந்த நிலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன இல்லத்தில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மிக முக்கியம் என்பதால் ராகுல் காந்தி அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அனல் பறக்க போகுது.. லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு.. காங்கிரஸ் அதிரடி!
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- புதிய பொறுப்பை ஏற்கும் அன்பு சகோதரர் ராகுலை இந்தியா வரவேற்கிறது. மக்களுக்கான அவையில் ராகுல் காந்தியின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications