நாளை சிங்கப்பூர், அடுத்து ஜப்பான்! ஒரு வாரம் வெளிநாடுகளில் வலம் வரப்போகும் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவரது வெளிநாட்டு பயண திட்டங்கள் வெளியாகி இருக்கிறது.
பன்னாட்டு தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் 2024 ஆம் ஆண்டு இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் இப்போதே அரசு ஈடுபட தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது இரு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை தமிழ்நாட்டில் நடைபெறு உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
முதலில் சிங்கப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24 ஆம் தேதி அங்கு நடைபெற இருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். இந்த மாநாட்டில் இந்தியா - சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறையை சார்ந்த 350 க்கும் அதிகமான வணிக நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அத்துடன் சிங்கப்பூரை சேர்ந்த சில நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூரில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் முதலீட்டு சூழல் குறித்தும் விரிவாக விளக்கப்பட உள்ளது.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக மே 26 ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜப்பான் நாட்டிற்கு செல்ல உள்ளார். தலைநகர் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய ஜப்பானின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதுடன், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும் அழைக்க உள்ளார்.
மே 31 ஆம் தேதி வரை ஜப்பானிலேயே தங்கி இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அந்நாட்டில் உள்ள வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் சார்பில், அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த சுற்றுப் பயணங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் காணொலியின் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்த முடிவு செய்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மிட்சுபிஷி நிறுவன தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23-ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன்." என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
"இதுதான் ஜப்பான்.." போருக்கு நடுவே தைரியமாக எடுத்த முடிவு.. உலக நாடுகள் கூட திணறுதே! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications