விருதுநகருக்கு வரப்போகும் தொழில் வாய்ப்பு.. பிரதமர் மித்ரா பூங்கா..மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
தென் தமிழ்நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். 1052 ஏக்கர் நிலம் உள்ளது மற்றும் எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தென் தமிழ்நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் ஜவுளித் துறையை மேம்படுத்தும். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ம.பி மற்றும் உ.பி.யில் PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் 5F (Farm to Fibre to Factory to Fashion to Foreign - பண்ணை முதல் ஃபைபர் முதல் ஃபேக்டரி முதல் ஃபேஷன் முதல் வெளிநாட்டு வரை) என்ற அளவுகோலில் ஜவுளித் துறையை மேம்படுத்தும்.
தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது டுவிட் மூலம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை அனுமதியளித்த இருந்த நிலையில் இந்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.4,445 கோடி செலவிடப்படும். அதன் கீழ் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு (பிஎம் மித்ரா) பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 7 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இது தனியார் - மத்திய அரசு கூட்டமைப்பில் அமைக்கப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தை தேர்வு செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது தென் தமிழ்நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். எங்கள் SIPCOT-க்கு 1052 ஏக்கர் நிலம் உள்ளது மற்றும் எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications