ஆரம்பிச்சிட்டாங்களே.. முதல் நாளே கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் ரகளை.. தலையில் அடித்து கொண்ட பயணிகள்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முதல்நாளே பஸ்ஸில் ரகளையில் ஈடுபட்டனர்
சென்னை: காலேஜ் திறந்த முதல் நாளிலேயே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை கூட்டி வருகிறது.
தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில், தமிழகத்தில் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.. முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கி உள்ளன..
3 மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் போலவே, முதலாமாண்டு மாணவர்களுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் என 2 நாட்கள் வகுப்புகள் நடக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
வடிவேலு பட பாணியில் இளநீர் திருடிய நபர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.

இன்று திறப்பு
அந்த வகையில், இன்று காலை மாணவர்கள் கல்லூரிகளுக்கு உற்சாகத்துடன் கிளம்பினர். ஆனால், வழக்கம்போல சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாங்கள் செல்லும் அரசு பேருந்துகளில் கலாட்டாவில் ஈடுபட்டனர்.. இன்று காலை, பிராட்வேயில் இருந்து கீழ்ப்பாக்கம் நோக்கி 15-G பஸ், வந்து கொண்டிருந்தது..

சக பயணிகள்
அந்த பஸ்ஸில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர்.. பஸ் முழுவதும் அவர்கள்தான் நிரம்பி இருந்தனர்.. அப்போது மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றுகொண்டு தாளம் தட்டி பாட்டு பாடி உள்ளனர்.. விதவிதமான சத்தங்களை எழுப்பி ரகளை செய்து வந்துள்ளனர்.. மேலும் சக பயணிகளையும் மாணவர்கள் அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.. இதனால், சில பயணிகள் வழியிலேயே இறங்கிவிட்டனர்.. பிறகு பஸ் கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை கடந்துள்ளது..

அச்சுறுத்தல்
அப்போது, மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தாளம் தட்டி பாட்டு பாடி அட்டகாசம் செய்தவதை, ஸ்டேஷனில் இருந்த போலீசார் கவனித்துள்ளார்.. இதனால் பஸ் பின்னாடியே ஜீப்பில் பின்தொடர்ந்து வந்து பஸ்ஸை வழிமறித்து, மாணவர்களையும் மடக்கி பிடித்தனர்.. ரகளையில் ஈடுபட்டவர்கள் எல்லாம் கல்லூரி மாணவர்கள்தானா?என்பதை அவர்களின் அடையாள அட்டையை வைத்து உறுதிப்படுத்தி கொண்டனர்.. இறுதியில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தந்தனர்..

கீழ்ப்பாக்கம்
இந்த சம்பவத்தினால், நிர்வாகம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படித்தான் இதே கீழ்ப்பாக்கத்தில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது.. பள்ளி மாணவர்கள் பஸ் டிரைவரையே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதனால், அப்போதிருந்தே இந்த வழித்தடத்தில் போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்..

பரபரப்பு
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் ரூட் தலை விவகாரம் அடிக்கடி தலைதூக்குவது வழக்கம்.. போலீசாரும், கல்லூரி நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.. நிர்வாகமும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களை பலமுறை எச்சரித்துள்ளது.. இத்தனை காலம் தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்ததால், இந்த விவகாரம் தலைதூக்காமல் இருந்த நிலையில், காலேஜ் திறந்த முதல்நாளே மாணவர்கள் போலீசில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications