ஆதீனப் போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.குரல்-மதுரை ஆதீனத்தை தூக்கி உள்ளே வையுங்க சார்.. காங். எம்.பி. ஜோதிமணி
சென்னை: ஆதீனம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். எனும் இந்துத்துவா இயக்கத்தின் குரலாக பேசுகிற மதுரை ஆதீனத்தை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தி உள்ளார்.
இந்துத்துவா அமைப்புகளில் ஒன்றான விஸ்வ ஹிந்து பரிஷத் மதுரையில் இந்து சாமியார்கள் மாநாட்டை நடத்தியது. மதுரையில் 2 நாட்களாக இந்து சாமியார்கள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் தமிழக ஜீயர்கள், ஆதீனங்கள் உள்ளிட்ட மடாதிபதிகள் பங்கேற்றனர்.

துறவியர் மாநாடு
இந்த துறவியர் மாநாட்டில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகளை உள்ளடக்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மதுரை ஆதீனம்
இந்த சாமியார்கள் மாநாட்டில் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசியதாவது: ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? அறநிலையத்துறையை கலைத்துவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்துக்களைப் பாதுகாக்க அனைத்து ஆதீனங்களும் துறவியர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர என்றார்.
Recommended Video

சர்ச்சை பேச்சு
மேலும் அரசியல்வாதிகள்தான் கோவில்களில் தக்கார்களாக உள்ளனர். இதனால் கோவில்களுக்குள்ளும் அரசியல் புகுந்து விட்டது. கோவில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக்கூடாராமாக மாறி வருகிறது. கோவில் உண்டியல்களில் பக்தர்கள் பணம் போடக் கூடாது என்று மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசினார்.மதுரை ஆதீனத்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ஜோதிமணி எம்.பி. கண்டனம்
இது தொடர்பாக கரூர் லோக்சபா தொகுதி எம்.பி ஜோதிமணி தமது சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு மதுரை ஆதீனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோதிமணி எம்.பி.யின் கண்டனம்: தமிழ் மண்ணின் ஆன்மீக மரபில் ஒரு தனிச்சிறப்பான இடம் ஆதீனங்களுக்கு உண்டு. குன்றக்குடி,பேரூர் உள்ளிட்ட ஆதினங்கள் தமிழ் மண்ணோடும்,மரபோடும்,சமூக வாழ்வோடும் இணைந்து பயணிப்பவை.சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்தவை. ஆதினங்களின் ஆன்மீகம் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானது.ஆர்எஸ்எஸ் இன் ஊதுகுழலாக ஒலிக்கும் தற்போதைய மதுரை ஆதினம் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். தமிழகத்தின் தொன்மையான ஆதீன மரபிற்கு களங்கம் விளைவிப்பவர்கள். இவர்களிடம் தமிழகம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஆதீனப்போர்வையில் ஒளிந்துகொண்டு, ஆர்எஸ்எஸ்/பாஜகவின் குரலாக , அமைதி,நல்லிணக்கத்தின் அடையாளமான தமிழக மண்ணில், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு ஜோதிமணி எம்.பி. பதிவிட்டுள்ளார்.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications