ஸ்டிரைட்டா ஸ்டாலினுக்கே பறந்த கோரிக்கை.. உதயநிதி துணை முதல்வரா? என்ன நடக்கிறது திமுகவில்?
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கோரி முதல்வருக்கு மனு தரப்பட்டுள்ளது
சென்னை: எதிர்பார்த்த ஒன்றுதான், இப்போது மெல்ல குரல் வெடிக்க துவங்கி உள்ளது.. உதயநிதியை துணை முதல்வராக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை கூட்டணி கட்சியில் இருந்து வெடிக்க துவங்கி உள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதுமே, உதயநிதிக்கு எந்த மாதிரியான பொறுப்பு தரப்படும்? ஒருவேளை அமைச்சர் பதவி தரப்படுமா? அப்படியே தந்தாலும் என்ன துறை இவருக்காக ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை..
அதேசமயம், சேப்பாக்கம் தொகுதியில் சிறப்பான பணியை மேற்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.. தொகுதிக்குள் ஒரு தெருவிடாமல், நடந்து சென்றும், ஆட்டோவில் சென்றும் மக்களின் குறைகளை உதயநிதி கேட்டறிந்தது மிகுந்த பாராட்டையே பெற்றது.

உள்ளாட்சி தேர்தல்
இந்த சூழலில்தான் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழகம் தயாரானது.. சென்னை மேயராக உதயநிதி நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.. இதற்கு காரணம், சென்னையை உதயநிதி நன்கு அறிந்தவர் என்ற காரணத்துக்காக மட்டுமல்ல.. அன்று முக ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, சிங்கார சென்னை திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார்.. இதற்கு பிறகு "சிங்கார சென்னை"யை அதிமுக ஆட்சியில் பெரிதாக கண்டுகொள்ளப்படவே இல்லை.. எனவே "சென்னை 2.0" என்ற கனவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாலும், இந்த திட்டத்தை உதயநிதி நிச்சயம் திறன்பட செயல்படுத்துவார் என்பதாலும், மேயர் பதவி ஒருவேளை உதயநிதிக்கு தரப்படலாம் என்ற முணுமுணுப்பும் எழுந்தது..
ஆனால், அதற்கான பேச்சை யாருமே எடுக்கவில்லை..

அன்பில் மகேஷ்
கடந்த சில தினங்களுக்கு முன்புதான், அமைச்சர் அன்பில் மகேஷ், திடீரென செய்தியாளர் சந்திப்பில், "உதயநிதிக்கு அமைச்சர் பதவி" என்ற பேச்சை ஆரம்பித்தார்.. உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்பதாலும், தன்னுடைய சொந்த விருப்பத்தை அன்பில் மகேஷ் இவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்றே இதை எடுத்து கொண்டாலும், அதை பொதுவெளியில், குறிப்பாக உதயநிதி பிறந்தநாளுக்கு முந்திய நாள் இந்த விஷயத்தை போட்டுடைத்ததுதான் முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டது.

ஷூட்டிங்
அதற்கேற்றபடி, உதயநிதியும், கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுக்க ஷூட்டிங்கில் கவனம்செலுத்தி வருவதாகவும், ஒருவேளை படங்களை முடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் கவனம் செலுத்துவார் என்றும் சொல்லப்பட்டது.. இந்நிலையில்தான், திமுக கூட்டணியில் இருந்தே உதயநிதிக்கு பதவி கொடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.. அமைச்சர் பதவி இல்லை, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று ஒருபடி மேலே சென்று கோரிக்கை எழுந்துள்ளது.. தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்டாலின்
அந்த மனுவில், "நீங்கள், சென்னை மாநகர மேயர், அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு படிநிலைகளை கடந்து இந்த பொறுப்புக்கு வந்திருந்திருக்கிறீர்கள். தன் இல்லத்திலேயே கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என இருவரையும் பார்த்தே வளர்ந்ததால், இருவரது ஆற்றலையும் இந்த இளம் வயதிலேயே ஆழமாக உள்வாங்கி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி
எனவே, தமிழக முதல்வராகிய நீங்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். இளம் தலைமுறையினர் மத்தியில் மதவாத சிந்தனைகளை வெறுத்து, சமத்துவ சிந்தனையை வளர்க்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதற்கு எல்லா மக்களும் விரும்பும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது பொருத்தமானதாக இருக்கும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக
இந்த கோரிக்கைதான் திமுக கூட்டணிக்குள் பரபரத்து வருகிறது.. ஆர்.எஸ்.ராஜனை பொறுத்தவரை ஏற்கனவே காங்கிரஸில் இருந்தவர், பிறகு கொஞ்ச நாள் ரஜினியோடு இருந்தார்.. அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று தெரிந்ததும், மறுபடியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருக்கு விவசாயப் பிரிவு மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.. இப்போது கூட்டணியில் மூத்த தலைவர்களே, உதயநிதி பதவி குறித்து வாய் திறக்காத நிலையில், ராஜன் தற்போது நேரடியாகவே ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video

துணை முதல்வர்?
உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தில் அழுத்தங்கள் தந்தும், ஸ்டாலின் அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.. அதேபோல, அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு பொறுப்பு தர வேண்டும் என்று சொல்லி வந்தும், அதையும் ஸ்டாலின் பொருட்படுத்தாமல் உள்ளார்.. இப்போது கூட்டணியில் இருந்தே கோரிக்கை வர ஆரம்பித்துள்ளது.. மற்றவர்களாவது அமைச்சர் பதவி கேட்டார்கள், இவர்கள் துணை முதல்வர் பதவியை முன்வைத்துள்ளனர்... இந்த விஷயத்தில், முதல்வர் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி துணை முதல்வர் பொறுப்பு உதயநிதிக்கு தரும் பட்சத்தில், திமுகவில் இளம் ரத்தம் மேலும் பாய்ந்து, கட்சியை செழுமைப்படுத்தும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
-
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?











Click it and Unblock the Notifications