அண்ணாமலை சொன்ன வார்த்தை.. கொதிக்கும் காங்கிரஸ்.. கமிஷனர் அருணை சந்திக்கும் செல்வப்பெருந்தகை?
சென்னை: என்னை ரவுடி பட்டியலில் உள்ளவர் என்று பேசியிருக்கும் அண்ணாமலையால் அதை நிரூபிக்க முடியுமா? எனவும், அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்குகள் போடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இந்த நிலையில், அண்ணாமலைக்கு எதிராக புகாரளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மீடியாவிடம் பேசினார். அப்போது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி கேள்வி வந்தபோது, "அவர் ஒரு ரவுடி. அவருக்கு எல்லாம் தெரியும். அவரை விசாரிக்க வேண்டும்" என்ற ரீதியில் சொல்லியிருந்தார். செல்வப்பெருந்தகை பற்றி அண்ணாமலை கடுமையாக பேசிய விபரங்களை அறிந்து செம கடுப்பாகியிருக்கிறார் செல்வப்பெருந்தகை.

அமைதியாக இருங்கள்: அதற்கேற்ப அவரை தொடர்புகொள்ளும் காங்கிரஸ் நிர்வாகிகள், "அண்ணாமலை மிக மோசமா விமர்சித்திருக்கிறார். நீங்க அமைதியா இருக்கீங்க. நீங்க அனுமதி கொடுங்க, அந்த ஆள் வீட்டு முன்பு போராட்டம் பண்ணுகிறோம்" என்று ஆவேசப்பட்டுள்ளனர். அவர்களை அமைதிப்படுத்திய செல்வப்பெருந்தகை, "நான் பார்த்துக்கிறேன். நீங்க ஏதும் செய்யப் போய் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகி விடப்போகிறது. அமைதியா இருங்கள் " என்று சொல்லியுள்ளார்.
ஆதாரம் இல்லாமல் பேசினால்: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'அண்ணாமலை ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்ற போது அரசியல் பேசியிருக்கிறார். ரவுடி பட்டியலில் என் பெயர் இருப்பதாக அண்ணாமலை கூறுகிறார். உண்மைக்கு புறம்பாக பேசினால், ஆதாரம் இல்லாமல் பேசினால் என்ன சட்டம் பாயும் என்று தெரியுமா?
ஐபிஎஸ் படித்தாரா?: எல்லா தலித் தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு எஸ்.சி. துறை ஆணையத்திடம் நாங்கள் புகார் கொடுக்க போகிறோம் என்று கூறுகிறார்கள். ஒருவேளை புகார் கொடுத்தால் அண்ணாமலை சிறைக்கு போவதை யாராலும் தடுக்க முடியுமா? எத்தனை ஆண்டுகள் சிறை என்று தெரியுமா? அரசியல் நாகரீகம் கருதி நான் வேண்டாம் என சொல்லியிருக்கிறேன்.
மனம் புண்படும் படி அவதூறாக பேசினால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமா வராதா? என்னை ரவுடி பட்டியில் உள்ளவர் என்று கூறுகிறார், எங்கேயாவது அதை நிரூபிக்க முடியுமா? அவர் பேசிய அவதூறு பேச்சுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று அவருக்கு தெரியாதா? அவர் ஐ.பி.எஸ். படித்தாரா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது" என காட்டமாக பேசியிருந்தார்.
புகார் கொடுக்க முடிவு: இதனிடையே சென்னை போலீஸ் கமிஷ்னர் அருணை சந்திக்க செல்வப்பெருந்தகை திட்டமிட்டு உள்ளாராம். அண்ணாமலைக்கு எதிராக கமிஷனர் அருணிடம் செல்வபெருந்தகை புகாரளிக்க இருக்கிறாராம்.. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறதாம்..
மேலும் செல்வப்பெருந்தகை கூறுகையில், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால், உளவுத்துறை தயாரித்துள்ள 32 பக்க அறிக்கையில் 261 குற்றவாளிகள் பாஜகவில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1977 வழக்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதற்கும் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்யுமாறு கேட்க போகிறேன். எதற்காக அண்ணாமலை ராஜினாமா பண்ணினார் என ஆய்வு செய்ய வேண்டும்" என்றும் கூறினார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications