செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக் கூடாது! ஜோதிமணிக்கு மரியாதை தரணும்! செல்வப்பெருந்தகை அட்வைஸ்
சென்னை: திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் போது எம்எல்ஏ செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக் கூடாது என்றும், எம்.பி.க்கான மரியாதையையும் மதிப்பையும் ஜோதிமணிக்கு அவர் தர வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் கவிதா, "முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமை தேவை" என்று உணர்ந்து தி.மு.க.வில் இணைந்ததாக அண்மையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சியும் திமுகவும் இந்தியா கூட்டணியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் திமுகவில் இணைந்தார் என செந்தில் பாலாஜி பெருமிதமாக கூறியிருந்தது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செந்தில் பாலாஜி- ஜோதிமணி
செந்தில் பாலாஜியின் இந்த பதிவிற்கு கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி விமர்சனம் செய்திருந்தார். அர்ஜென்டினாவில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள சென்றதால் ஜோதிமணி தாமதமாக பதில் அளிப்பதாக கூறி ஒரு கண்டன பதிவை பகிர்ந்திருந்தார்.
தாமதமான எதிர்வினை
அதில் "சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜென்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் திரு. செந்தில் பாலாஜி அவர்களின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.
கூட்டணி தர்மம்
கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
கொள்கை
கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில்,பரஸ்பர புரிதல்,ஒத்துழைப்பு,நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.
சுயமரியாதை
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதையை எளிதில் கடந்து போய்விட முடியாது.
கசப்பான சம்பவங்கள்
கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் திரு. செல்வப் பெருந்தகை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன்
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
பாசிச சக்தி
தமிழ்நாட்டின் மொழி,இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும்,பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்.
ட்வீட் நீக்கம்
பின்குறிப்பு : தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து திரு. செந்தில் பாலாஜியின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது.
@SPK_TNCC
@mkstalin என தெரிவித்திருந்தார்.
செல்வப்பெருந்தகை
இந்த விவகாரம் குறித்து ராணிப்பேட்டையில் செல்வப்பெருந்தகை கூறுகையில், கூட்டணியில் இருக்கும் போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக் கூடாது. நானும் அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். பின்னர் அந்த ட்வீட் நீக்கப்பட்டது. இப்படி செய்வதால் முதல்வருக்குத்தான் நெருக்கடி ஏற்படும். அதை தவிர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.
ஜோதிமணி பெருந்தன்மை
எம்பி ஜோதிமணி மிகவும் பெருந்தன்மையானவர். அவரும் பெருந்தன்மையோடு எதிர்வினையாற்றியுள்ளார். கூட்டணி தர்மம் என்பது வேறு.இருந்தாலும் எம்பிக்கான மரியாதையையும் மதிப்பையும் ஜோதிமணிக்கு செந்தில் பாலாஜி தர வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications