தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை... நிரம்பி வழியும் அணைகள்... ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!
சென்னை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், அப்பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக 13 அணைகள், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள இராமநதி மற்றும் கடனாநதி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 84 கன அடி கொள்ளளவு கொண்ட இராமநதி, தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு 306 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. சுமார் 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புல்லூர் தடுப்பணை
கர்நாடகா பகுதியில் உள்ள பாலாற்று நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புல்லூரில் உள்ள 12 அடி உயர தடுப்பணை நிரம்பியுள்ளது. பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாலாற்றில் படுகையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 119 அடியாகும். தற்போத அணையின் நீர்மட்டம் 113.5 அடியை எட்டியுள்ளது.

ஆழியார் அணையில் நீர் திறப்பு
கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினகளாக கன மழை பெய்து வருவதால் ஆழியார் அணையிலிருந்து 11 மதகுகள் வழியாக உபநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அம்பராம்பாளையம், ஆத்து பொள்ளாச்சி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வழியாக செல்லும் பாலம் மூழ்க்கும்படி வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது

வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலி
மீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வழியாக பாலத்தை கடக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்கும்படி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதுதொடர்பான வீடியோ பதிவுகள் வைரலாகியது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்த நபர், பொள்ளாச்சி அருகே சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த அந்த நபர், காளியப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்த விவசாயி சந்திரசாமி என்பது தெரியவந்தது. பொதுமக்கள் பாலத்தை கடக்கும்போது கவனமாக செல்லுமாறு, காவல்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

வேலூர் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால், மாநகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேல் அரசம்பட்டு உத்திர காவேரி ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேறு வருகிறது

அமிர்தி காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு
வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஜவ்வாது மலை தொடரிலும் கனமழை பெய்து வருவதால், அமிர்தி காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அமிர்தியில் இருந்து ஜமுனாமத்தூர் செல்லும் தரைபாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
வெள்ளை அறிக்கை இல்ல.. வேஸ்ட் அறிக்கை! கோட்டையில் லெஃப்ட் ரைட் வாங்கிய சிஎம் விஜய்! பம்மிய ஆபீசர்ஸ்? -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications