மயில்சாமி என் சம்பந்தி என நான் காட்டி கொண்டதே இல்லை.. காரணம்.. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உருக்கம்
மயில்சாமி என்னுடைய சம்பந்தி என நான் காட்டிக் கொண்டதில்லை- கு பிச்சாண்டி உருக்கம்
சென்னை: நடிகர் மயில்சாமி எனக்கு சம்பந்தி என்பதை நான் காட்டிக் கொண்டதே இல்லை என தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி உருக்கமாக தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி, தனது அசாத்திய நடிப்பால் மக்களை சிரிக்க வைத்தவர். முதல் முறையாக மிமிக்ரிக்காக கேசட் போட்டவர். எல்லாவற்றையும் விட கொடை வள்ளல்.
தனக்கு 10 ரூபாய் கிடைத்தாலும் அதை அப்படியே தானம் தர்மம் செய்து விட்டு வீட்டுக்கு வெறுங்கையோடு செல்வாராம். யாருக்கு எந்த உதவியாக இருந்தாலும் நான் இருக்கிறேன் என செய்வாராம்.

நிறைய பணம்
தன்னால் நிறைய பணம் கொடுத்து உதவ முடியாவிட்டால் உடனே நீங்கள் வேறு இடத்தில் உதவி கேட்டுக் கொள்ளுங்கள் என கையை விரிக்காமல் தனது சக நடிகர்களிடம் உதவி கேட்டு பெற்று உதவி செய்வாராம். அது போல் புயல் , மழை, வெள்ளம் காலங்களில் இவருடைய பகுதியில் இருக்கும் ஏழை எளிய , சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு 3 வேளையும் சாப்பாடு கேரண்டி.

பந்தா இல்லாதவர்
நடிகர் என்ற பந்தா இல்லாமல் மக்களோடு மக்களாக பழகுவாராம். எம்ஜிஆர் பக்தியும் சிவ பக்தியும் அதிகம். கோயில்களுக்கு சிவதொண்டு ஆற்றுவாராம். கஜா புயலின் போது கூட டெல்டா மக்களுக்கு இங்கிருந்து உணவு உள்ளிட்ட உதவிகளை மயில்சாமி கொண்டு சென்றார். இதுவரை எத்தனையோ பெரியாட்கள் பழக்கத்தில் இருந்தாலும் அவர்களிடம் தனக்கு இது வேண்டும், அது வேண்டும், தன் பிள்ளைகளுக்கு வேண்டும் என்றெல்லாம் கேட்டதே இல்லை.

சிவராத்திரி அன்று மாரடைப்பு
பொதுமக்களுக்கு இந்த வசதி வேண்டும். ஏழை மக்களுக்கு இந்த உதவி வேண்டும் என கேட்டு உதவும் வல்லமை படைத்தவர். இவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கு இரவு கண் விழித்து ஆன்மீக பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து விடியற்காலை தனது வீட்டிற்கு சென்றார்.

இட்லி சாப்பிட்ட மயில்சாமி
அப்போது பசிக்கிறது என கேட்டுள்ளார். இட்லி சாப்பிட்ட அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினராம். இருந்தாலும் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அவரை கொண்டு சென்ற போதும் அவர்கள் மயில்சாமி ஏற்கெனவே இறந்துவிட்டார் என கூறினர்.

கு.பிச்சாண்டியின் சம்பந்தி
இதையடுத்து அவர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவரது மறைவுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மயில்சாமி தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டியின் சம்பந்தி ஆவார். கு. பிச்சாண்டி தனது மகள் ஐஸ்வர்யாவை மயில்சாமியின் மகன் அருமையாநாயகத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் மயில்சாமியின் இறப்பு குறித்து பிச்சாண்டி தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.

நல்ல மனிதர்
அந்த பேட்டியில் மயில்சாமி மிகவும் நல்ல மனிதர். என் மகளை அவரது மகனுக்கு திருமணம் செய்து கொடுத்ததால் இதை கூறவில்லை. அவர் உண்மையிலேயே நல்ல மனம் கொண்டவர். எங்கள் குடும்பத்தினரிடம் மரியாதையாக நடந்து கொள்வார். மயில்சாமி என் சம்பந்தி என நான் வெளியே அதிகமாக காட்டி கொண்டதில்லை. ஏனென்றால் அவர் மிகப் பெரிய நடிகர். அவரின் இறப்பு எங்கள் குடும்பத்திற்கே பெரும் இழப்பாகும். இவ்வாறு கு பிச்சாண்டி தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications