6 தொகுதிகள்.. காய் நகர்த்தும் திமுக.. பிடிவாதமாக நிற்கும் சிபிஎம்.. பெ.சண்முகம் சொன்னது என்ன?
சென்னை: திமுக சொல்லும் தொகுதி எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் ஏராளமான புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் இரட்டை இலக்க தொகுதிகள் என்ற கோரிக்கையை கைவிட்டதாக கூறிய பெ.சண்முகம், திமுகவுடன் நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், மூஸ்லீம் லீக் மற்றும் மமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. அடுத்ததாக சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேசி வருகிறது.

சிறிய கட்சிகளான மக்கள் நீதி மய்யம், ஆதித் தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையை திமுக முடித்துவிட்டது. இந்த நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் 2அம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்பின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், திமுக தரப்பில் தொகுதிகளின் எண்ணிக்கையை சொல்லி இருக்கிறார்கள். அதில் எங்களுக்கு ஏற்பு இல்லை.. கூடுதலான தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறோம்.. இதனால் திமுக தலைமையுடன் பேசிவிட்டு மீண்டும் பேசலாம் என்று கூறி இருக்கிறார்கள்.
இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும்.. திமுக கூட்டணியில் புதிய பல கட்சிகள் இணைந்துள்ளன. இப்படி நியாயமான காரணத்தை திமுக தரப்பு கூறியுள்ளது. அது ஏற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த கூடுதலான தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறி இருக்கிறோம்.
நாளை மீண்டும் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூறி வந்தார். தற்போது கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கூறி இருந்தார். இதன் மூலமாக திமுக தரப்பில் கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதி எண்ணிக்கையையே மீண்டும் சொல்லப்பட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications