மின்சார வாரியம் சரவெடி.. தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் "சார்ஜிங் மையங்கள்".. இ சார்ஜிங் பாயிண்ட்
சென்னை: அதிகரித்துவரும் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக தமிழ்நாடு மின்வாரியம், அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது. அந்தவகையில், நம்முடைய நாட்டிலும், மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்கள் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் வரை 10.44 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் விற்பனை ஆகி உள்ளன. இதில், தமிழகத்தில் 4.14 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன.
சார்ஜிங் பாயிண்ட்: இந்நிலையில், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாட்டில், ஹைவேஸ்களில், 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.. அதாவது, வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
மக்களின் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் மின்சார வாரியம் கூறியிருந்தது.. இப்போது இதுகுறித்த இன்னொரு அப்டேட் வெளியாகி உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க 100 இடங்களை மின்வாரியம் கண்டறிந்துள்ள நிலையில், விரைவில் இதற்கான டெண்டர் விடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள்: அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக தமிழ்நாடு மின்வாரியம் தேசியநெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் தலா 25 கிமீ தூரத்துக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் இடங்களை தேர்வு செய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் சொல்லும்போது, தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு மின்சார வாகன கொள்கையை வெளியிட்டது. அதில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.. அதன்படி, முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் 100 இடங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
சார்ஜிங் மையங்கள்: அந்த இடங்களில் சார்ஜிங் மையங்கள் மட்டுமின்றி வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, குடிநீர், ஓட்டுநர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதி, தீ தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படும்.. விரைவில் இதற்கான டெண்டர் விடப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மின்சார வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகி வரும்நிலையில், தமிழக மின்வாரியத்தின் இந்த தகவல் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்












Click it and Unblock the Notifications