சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் அசத்தறாங்களே.. அதென்ன பசுமை புத்தாய்வு.. பூரித்த இளைஞர்கள்.. தமிழக அரசு "சபாஷ்"
சென்னை: சுற்றுச்சூழலை மேம்படுத்தும்வகையில், அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது தமிழக அரசு.. இது தொடர்பாக முக்கிய தகவலை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நம்முடைய சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..
நடைமுறை: அந்தவகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதாவது, தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் 10 வருடங்களுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம், தமிழ்நாடு எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் என்று முதல்வர் ஸ்டாலினும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆக்ஸிஜன்: இந்த கிரீன் தமிழ்நாடு மிஷன் (Green Tamil Nadu Mission) திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகர்புறங்களில் உள்ள வெப்பத்தின் தாக்கம் குறையும்.. பல்லுயிர் பெருக்கம் நிறைய நிகழும்.. ஆக்ஸிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும்.. காற்றில் உள்ள மாசு கட்டுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. இதற்காகவே, www.greentnmission.com என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவும் வகையிலும் "முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்" துவங்கப்பட்டுள்ளது.
In a pioneering initiative CM Thiru @mkstalin rolled out the Tamil Nadu Chief Minister's Green Fellowship Programme today. 40 young men and women have been selected as first green fellows of the state. Anna University is the knowledge partner. The Fellows are all set to embark… pic.twitter.com/IDy15a2ZVJ
— Supriya Sahu IAS (@supriyasahuias) August 21, 2023
வாழ்த்துக்கள்: சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். இதை செயல்படுத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் ஆய்வு நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 பசுமை ஆர்வலர்கள், முதல்வரை சந்தித்து வாழ்த்துக்களையும் பெற்றிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, அவர் இந்த திட்டம் அவர் விவரித்து சொன்னதாவது:
"இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், வேலை வாய்ப்பு, வளர்ச்சி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய மூன்று துறைகளின் துணையுடன், தமிழகத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு, தலைமை தாங்கும்விதமாக, சுற்றுச்சூழல் ரீதியாக, முன்னேறிய மாநிலமாக மாற்றுவதாகும்.
As soon as the bell rings the Mahouts and Cavadis start mixing Ragi, horsergram, rice, coconut and jaggery with some mineral mix to feed their elephants. The camp comes alive with our jumbos opening their big mouths to catch mammoth food balls .. pure joy to see them eat from the… pic.twitter.com/Vl8PdqKXUx
— Supriya Sahu IAS (@supriyasahuias) August 20, 2023
பசுமை புத்தாய்வு திட்டம்: இளைஞர்களின் பங்களிப்பானது, காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைகளில் பெரிதும் தேவைப்படுகிறது.. இதை மையப்படுத்தியே, "பசுமை புத்தாய்வு திட்டம்" என்ற பெயரில் முதல்முறையாக அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே மீண்டும் மஞ்சப்பை, பசுமை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்தி வருகிறோம் என்றால், இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வாய்ந்ததுபோல பசுமை புத்தாய்வு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் நேரடியாகவே மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகளுடனான நேரடி அனுபவத்தை பெற முடியும்.. இதற்காக முதலில் 40 பேரை மட்டுமே தேர்வு செய்துள்ளோம்..
இந்த குழுவினர் பசுமை திட்டத்தில் தீவிர கவனத்தை செலுத்துவார்கள்.. இவர்களின் பணியை கண்காணிக்கும் வகையில், தொழில்நுட்ப குழுவானது அண்ணா பல்கலைக்கழகம் மூலம் செயல்படும்... இந்த திட்டம் மிக முக்கிய மாற்றத்தை உண்டாக்கும்" என்று சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்வீட்டர் பக்கத்திலும் பதிவிட்டு, விழா போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார்.
2 ஆண்டுகள்: அதுமட்டுமல்ல, பசுமை தோழர்கள், 2 வருடங்களுக்கு சேவையாற்றுவார்கள்.. இந்த கால கட்டத்தில் அவர்களுக்கு உதவித் தொகையாக, மாதம், 60,000 ரூபாய், லேப்டாப் வழங்கப்படும். 2 ஆண்டு சேவை முடிவில், அண்ணா பல்கலையிடம் இருந்து, "காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை" என்ற முதுகலை பட்டய படிப்புக்கான பட்டத்தை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications