ரேஷன் கடையில்.. பருப்பு, பாமாயிலுக்கு சிக்கல்? எச். ராஜா சொன்ன பாயிண்ட்.. பாய்ந்து வந்த தமிழக அரசு
சென்னை: ஒவ்வொரு நபருக்கும் மாதம் 5கி அரிசியும், 1கி பருப்பும் வழங்குவதற்கு மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை, இது 100% ஒன்றிய அரசின் மானியம் என்று ஹெச்.ராஜா பேசி இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு அதை மறுத்துள்ளது..
செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு செலவு செய்வது இல்லை. மத்திய அரசே செலவு செய்கிறது. ஒவ்வொரு நபருக்கும் மாதம் 5கி அரிசியும், 1கி பருப்பும் வழங்குவதற்கு மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை, இது 100% ஒன்றிய அரசின் மானியம் என்று எச். ராஜா கூறி இருந்தார்.

எச். ராஜா சொன்ன கருத்து தவறானது என்று உண்மை கண்டறியும் குழு விளக்கி உள்ளது. அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில்,
1. துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கான முழு நிதியையும் மாநில அரசே வழங்குகிறது.
2. முன்னுரிமையற்ற குடும்ப அட்டை(NPHH): முழு நிதியும் மாநில அரசால் வழங்கப்படுகிறது.
2. அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் அளவு 12 (அரிசி / கோதுமை கிலோவில்) - 1 நபருக்கு 12 கிலோ, 1.5 நபருக்கு 14 கிலோ, 2 நபருக்கு 16 கிலோ, 2.5 நபருக்கு 18 கிலோ, 3+ நபருக்கு 20 கிலோ
3. முன்னுரிமை குடும்ப அட்டை (PHH): மாநில அரசும் கூடுதல் நிதி வழங்குகிறது. 1 நபருக்கு 7, 1.5 நபருக்கு 4, 2 நபருக்கு 6, 2.5 நபருக்கு 3 , 3+ நபருக்கு 5
4. அந்தியோதயா அன்னயோஜனாகீழ் மட்டும் முழுவதுமாக ஒன்றிய அரசால் வழங்கப்படுகிறது, என்று விளக்கி உள்ளது.
ரேஷன் அதிரடி: தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அரிசி திருட்டு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நடவடிக்கை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக முக்கியமான சில தகவல்களை வெளியிட்டு உள்ளது. இதை தடுப்பதற்காக முக்கியமான திட்டம் ஒன்றையும் கையில் எடுத்துள்ளது.
இதற்காக இனி ஜிபிஎஸ் உடன் கூடிய இ-வழித்தடம் அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும். வாகனங்கள் கண்காணிப்பு, ஜிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்படும் லாக் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications