டெல்டாவில் திமுக ரொம்ப ஸ்ட்ராங்.. நெல்லை வைத்து பாஜக பாலிடிக்ஸ்! விளாசிய அமைச்சர் சக்கரபாணி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 2021 தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றதால் நெல்-லை வைத்து பாஜக - அதிமுக அரசியல் செய்ய பார்க்கிறார்கள் எனவும், ஆனால் அதற்க்யு எப்பொழுதும் வாய்ப்பு இல்லை, டெல்டா மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ளனர் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பிஎஸ்என்ஏ கல்லூரி கலையரங்கில் நடைபெறும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் நடைபெற்றது.

இதில் தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அக்டோபர் 1 முதல் குறுவை நெல் கொள்முதல் பணி நடைபெறும்.

Sakkarapani mk stalin dmk

சக்கரபாணி குற்றச்சாட்டு

டெல்டா மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் ஈரப்பத சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டது. அதன் பேரில் முதலமைச்சர் அனுமதி பெற்று துறையின் செயலாளர் மத்திய செயலாளருக்கு கடிதம் எழுதினார். உடனடியாக தமிழகத்திற்கு 3 மத்திய குழுக்கள் வந்து பார்வையிட்டனர். குழு பார்வையிடும் பொழுது நெல்லின் ஈரப்பதம் 20 முதல் 25% வரை இருந்தது. ஆனால் அனுமதி வழங்கவில்லை. நெல் ஈரப்பதம் 17% இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என சென்னைக்கு வந்திருந்த மத்திய அமைச்சரிடமும் நான் மற்றும் துறை சார்ந்த அலுவலருடன் இணைந்து கடிதம் கொடுத்திருந்தோம்.

டெல்டா நெல் அரசியல்

செறிவூட்டப்பட்ட அரிசி 100 கிலோவிற்கு 1 கிலோ கலக்க வேண்டும் என விதி இருந்தது. ஜூலை மாதம் முதல் மத்திய அரசு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதன்படி 34,000 டன் கொள்முதலுக்கு 5 ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தோம். 10 மெட்ரிக் டன் -க்கு 1 சாம்பிள் என மத்திய அரசு கூறியிருந்தார்கள். அதற்கும் விதிவிலக்காக 25 மெட்ரிக் டன்னுக்கு ஒரு சாம்பிள் எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தோம். ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா தமிழ்நாடு ஆகிய இடங்களில் அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல் கொள்முதல் சிக்கல்

ஆனால் நெல் ஆய்வு செய்வது வட இந்தியாவில் உள்ளது. ஆய்வு மையத்தை தென்னிந்தியாவிற்கு கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தோம். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி நெல் கொள்முதல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேசினார். ஆனால் அதற்கு யாரும் பதில் அளிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நெல் ஆய்வு செய்து சென்றனர் அவர்களாவது அனுமதி வாங்கி கொடுக்கலாம். அன்புமணியும் கூட்டணியில் உள்ளார். அவரும் வாங்கித் தரவில்லை.

பாஜக அதிமுக அரசியல்

2021 சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதனால் நெல்லை வைத்து அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர். அதற்கு எப்பொழுதும் வாய்ப்பு இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் நெருக்கமாக உள்ளனர். தற்போது விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் முதலமைச்சர் கொடுத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டர் ரூ 20 ஆயிரம் இழப்பீடு தருவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஈரப்பதம் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மத்திய அரசு காலம் தாழ்த்துகின்றனர் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றனர்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+