சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. இன்று 2 ஆயிரம் ஸ்பெஷல் பஸ்களை இயக்க அரசு முடிவு.. பயணிகள் மகிழ்ச்சி.. களைகட்டும் தீபாவளி

தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக இன்று 2,000 பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.. இதில், சென்னையில் இருந்து 1,705 சிறப்பு பஸ்களும், மற்ற முக்கிய ஊர்களில் இருந்து 1,807 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் நேற்று முதல் 13ம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

TN gov Special buses movement for Diwali Festival

அந்த வகையில், டிக்கெட் ரிசர்வ் செய்தவர்கள் நேற்று முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல துவங்கி விட்டனர்... வழக்கமாக 2,000 பஸ்கள்தான் இயக்கப்படும்.. ஆனால் நேற்று மட்டும் 1,346 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

சிறப்பு பஸ்களை பொறுத்தவரை 5 பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன... இந்த பஸ்களில் 54,040 பயணிகள் பயணித்துள்ளனர். அதேபோல, இன்று 2,000 பஸ்களை இயக்க திட்டம் இருக்கிறது.. சென்னையில் இருந்து 1,705 சிறப்பு பஸ்களும், மற்ற முக்கிய ஊர்களில் இருந்து 1,807 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

பண்டிகை தினமான நாளை மறுநாள் 2,000 தினசரி பஸ்களும், சென்னையில் இருந்து 1,580 சிறப்பு பஸ்களும், பல்வேறு இடங்களில் இருந்து 2,540 பஸ்களும் இயக்கவும் போக்குவரத்து கழகங்கள் சார்பில் முடிவாகி உள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 1,288,717 பேர் பலி.. இந்தியாவில் ஒரே நாளில் 549 பேர் தொற்றுக்கு பலி கொரோனாவுக்கு உலக அளவில் 1,288,717 பேர் பலி.. இந்தியாவில் ஒரே நாளில் 549 பேர் தொற்றுக்கு பலி

கோயம்பேட்டிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படும் பஸ்கள் சுற்றுச்சாலை வழியாக இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் சற்று குறைவாக இருந்தது... இதேபோல் தனியார் ஆம்னி பஸ்களிலும் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

தீபாவளியை கொண்டாட மக்கள் வழக்கமாக உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள். தீபாவளி விற்பனையும் களைகட்டி வருகிறது.

English summary
TN gov Special buses movement for Diwali Festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X