சர்ச்சை பேச்சால் அண்ணாமலை மீது வழக்கு.. ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி.. ஏன் அரசு அனுமதி தேவை?
சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.

அண்ணாமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும் போது, மீனாட்சி அம்மன் கோவிலில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முத்துராமலிங்க தேவர், அறிஞர் அண்ணாவை பார்த்து கடவுள் பக்தி இல்லாதவர்கள் கடவுள் பக்தி இருப்பவர்களை தவறாக பேசினால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் என எச்சரிக்கை செய்தார் எனவும், இதனால் பி.டி.ராஜனும் அண்ணாவும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர் எனவும் கூறியிருந்தார்.
ஆனால் முத்துராமலிங்கத் தேவர் அவ்வாறு கூறவில்லை என பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அண்ணாமலை கூறிய தகவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வாறு இட்டுக் கட்டப்பட்ட கட்டு கதைகளை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். அண்ணாமலை பேச்சு குறித்த ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் யுவராஜ், அண்ணாமலை மீது இரண்டு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாக தமிழக அரசு முடிவு செய்து, வழக்கு தொடர்வதற்கான அனுமதி கோரி, ஆளுநருக்கு பரிந்துரை செய்த நிலையில், அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக அரசின் சார்பில் அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் நகல் சேலம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். அதன் பின்னர் அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெறுப்பை பரப்பி இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் ஐபிசியின் பிரிவு 153A இன் கீழ் ஒரு தனி நபரால் தாக்கல் செய்யப்பட்டதால், நீதிமன்றத்தின் விசாரணைக்கு, சிஆர்பிசியின் பிரிவு 196 இன் கீழ் மாநில அரசின் அனுமதி கட்டாயம். அதன்படியே தமிழக அரசு, தேவையான அனுமதியை வழங்கியுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம்












Click it and Unblock the Notifications