சூடுபிடிக்கும் பல் பிடுங்கிய வழக்கு! பல்வீர் சிங்கிற்கு நெருக்கடி.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு
சென்னை: பல்பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சிறு சிறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை பல்வீர் சிங் மற்றும் போலீஸார் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக வீடியோக்களை பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டனர். இந்த சம்பவத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு உயர்மட்ட விசாரணை குழுவின் பரிந்துரையின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தனர். குறைந்தபட்ச இழப்பீடு வழங்க வன்கொடுமை சட்டத்தில் இடம் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. இதனிடையே பற்களை பிடுங்கும் போது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் எங்கே என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் அந்த காட்சிகளை வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கிய போது சிசிடிவி செயல்படவில்லை. ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் உத்தரவின் பேரில் சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தனர். இதனிடையே பல்வீர் சிங்ஸ ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) சிபிசிஐடி போலீஸார் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications