காசு, பணம், துட்டு, மணி! அரசு ஊழியர்கள் காட்டில் "மழை"! தீபாவளி போனஸ் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை 2023-2024 இல் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டை போல் அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு இலட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
அது போல் போக்குவரத்து கழகத்திற்கும் போனஸ் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் டாஸ்மாக் பணியாளர்களுக்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 20 சதவீதமாக உயர்த்தி வழங்குமாறு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தது.
அதன்படி தமிழக அரசுடன் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இன்றைய தினம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழக அரசு ஊழியர்களுக்கு நிறைய இனிப்பான செய்திகள் வருகின்றன. அந்த வகையில் அண்மையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications