6 புதிய பட்டய படிப்புகள் அறிமுகம்.. சட்டசபையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி!
சென்னை : புதிதாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் 6 புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. துறை வாரியான கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறையில் புதிதாக திட்டமிடப்பட்டுள்ள 15 திட்டங்கள் குறித்து அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:
* அச்சு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய 4 சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 6 புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். 2025-26 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப் படுத்தப்படும்.

* கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் ரூ.21 கோடியில் ஆண்கள் விடுதி கட்டடம் கட்டப்படும்.
* ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் ரூ.14 கோடியில் கூடுதல் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.

* சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.
* கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
* ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் மாணவியருக்கு தனி ஓய்வறை கட்டிடம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் அமையும். தனி ஓய்வறை தலா ரூ.5 லட்சம் வீதம் 171 கல்லூரிகளில் கட்டப்படும்.
* ரூ. 3 கோடி மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரவியல் ஆய்வகம் கோயம்புத்தூர், சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். பலவிதமான பயிற்சி திட்டங்கள் பட்டறைகள் (workshops) மற்றும் படிப்புகள் வழங்கப்படும்.

* ரூ.3 கோடி மதிப்பீட்டில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகங்கள் திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் தலா ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். மின்சார வாகன மின்கலன்கள் மற்றும் மின்கல மேலாண்மை அமைப்புகள், மின்னேற்றி, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், பொருட்களின் இணையம் மற்றும் தானியங்கி வாகன மின்னணுவியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துரிதப்படுத்தப்படும்.
* காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் (Internet of Things Laboratory), ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* பொருள் சேர் உற்புத்தி ஆய்வகங்கள் (Additive Manufacturing Laboratory) வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் போட்டித்தேர்வுளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பொறியியல் பட்டதாரிகளின் முதுகலை படிப்பை ஊக்குவிக்கவும்,வேலை வாய்ப்புகளை விரிவு படுத்தவும் ஒரு மாணாகர்களுக்கு ரூ. 8500 ஒதுக்கப்படும். GATE, IES, CAT, GMAT, GRE, IELTS, TOEFL போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும்.
* 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் துவங்கப்பட்ட 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலிருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றிற்க்கு கொள்முதல் செய்யப்படும். ஆசிரியர்கள், மாணாக்கர்களுக்கு ஆகியோருக்கு இருக்கைகள், வகுப்பறைகளுக்கு செராமிக் கரும்பலகைகள் ஆகிய தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும்.
* தொழில்நுட்ப கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்த ரூ.2 கோடியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications