டிராகன் பழ விவசாயத்தை அதிகரிக்க புதிய திட்டம்.. விவசாயிகள் நலன் காக்க முக்கிய அறிவிப்புகள்!
சென்னை: விவசாயிகள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார் வேளாண்மை - உழவர் நலத்துறை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று வேளாண்மை - உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் வருமாறு:
1. மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிப்பதற்காக சிறப்புத் திட்டம் 18 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்.
2. ரூ. 10 கோடியே 19 லட்சம் மானியத்தில் பசுமைக் குடில், நிழல்வலைக் குடில்கள் அமைக்கப்படும்.
3. 5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.10 கோடி செலவில் பாதுகாப்புக் கூடங்கள் அமைக்கப்படும்.

4. துவரை உள்ளிட்ட பிற பயறு வகைகளின் பரப்பு விரிவாக்கத்திற்கும் அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
5. சென்னை மாநகருக்கு காய்கறி அளிக்கக்கூடிய மாவட்டங்களில் நிழல்வலைக் குடில் அமைத்து காய்கறிகள் சாகுபடியினை ஊக்குவித்து காய்கறிகளின் வரத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
6. டெல்டா மாவட்டங்களில் வறட்சிக் காலங்களில் பாசன நீர் தேவையினைப் பூர்த்தி செய்திடும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரி மேம்படுத்தப்படும்.
7. திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா, சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலை மரபணுப்பூங்கா ஆகியவற்றின் அடிப்படை வசதிகள் ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

8. பேரிடர் காலங்களில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சக்கரை வகை நெல் அறுவடை எந்திரங்களை மாற்றி வடிவமைத்திட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
9. அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.
10. தொழில் துவங்க ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு இலவசமாகத் திட்ட அறிக்கை தயாரித்து வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

11. டிராகன் பழத்தின் உற்பத்தி பரப்பினை அதிகரிக்க ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் டிராகன் பழத்திற்கான செயல் விளக்கத் திடம் அமைக்கப்படும்.
12. கூடுதல் விவரங்களுடன் உழவர் செயலி மேம்படுத்தப்படும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications