30 சிறப்பு அதிகாரிகள் நியமனம்.. மாதத்தில் 4 நாட்கள் கள ஆய்வு.. ‘தவறு நடந்தால்..’- தமிழக அரசு அதிரடி!
சென்னை : தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களை கண்காணிக்க 30 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் ஏற்படுத்தப்பட்டு அதற்கு முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அதன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க 3ப் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பதவி ஏற்றார். ஆட்சிப் பொறுப்புக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ளன. முக ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை போன்ற நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.

திமுக அரசின் திட்டங்கள்
தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் ஏற்படுத்தப்பட்டு அதற்கு முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் மூலம் நான் முதல்வன் திட்டம், புத்தாய்வு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

30 சிறப்பு அதிகாரிகள்
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாதத்தில் 4 நாட்கள்
இந்த சிறப்பு அதிகாரிகள், மாதத்தில் நான்கு நாட்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது அனைத்து திட்டங்களின் பணிகளையும் கண்காணிக்க வேண்டும், பயனாளிகளின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும், திட்டங்கள் விதிகளின் படி செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவறு நடந்தால்
மேலும், சிறப்பு அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும்போது ஏதாவது தவறு நடந்து இருந்ததைக் கண்டறிந்தால் உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இந்த ஆய்வுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications