ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு “ஸ்பெஷல்” டாஸ்க்.. சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு.. தமிழக அரசு அதிரடி!
சென்னை: சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும் நலத்திட்ட உதவிகளை நேரடியாக பொதுமக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு அலுவலர்கள் பேரிடர் நேரத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
மாவட்ட வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கண்காணிப்பு அலுவலர்கள் பேரிடர் நேரத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் முதன்மைச் செயலாளர் சி.விஜயராஜ் குமார் ஐஏஎஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்னிட் ஐஏஎஸ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ், சென்னை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் எஸ். மதுமதி ஐ.ஏ.எஸ், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் செயலாளர் வீரராகவ ராவ் ஐஏஎஸ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குக் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான எம். வள்ளலார் ஐஏஎஸ், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையர் இ.சுந்தரவல்லி ஐஏஎஸ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல இயக்குநர் எம்.ஆசியா மரியம் ஐஏஎஸ், நாமக்கல் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சி.என். மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications