அரசு பஸ்ல.. டயர், ஸ்பிரிங் ஒன்னுகூட சரியா இல்லையாமே.. 15 வருட அரசு பஸ்களுக்கு வந்த சிக்கல்.. ஏன்?
சென்னை: 15 வருட பழைய பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி தந்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழக அரசு இதுகுறித்து நம்பிக்கை தகவல் ஒன்றை தந்துள்ளது.
15 வருட பழைய பஸ்களை இயக்க மோட்டார் வாகன சட்டத்தின்படி அனுமதி கிடையாது.. இப்படி 15 வருடங்கள் நிறைவடைந்த வாகனங்களின், பதிவானது ரத்து செய்யப்பட்டு, அவை கழிவுகளோடு சேர்க்கப்பட்டுவிடும்.. இதனால் மக்களுடைய பாதுகாப்பு உறுதி செய்வதுடன், தேவையற்ற விபத்துக்கள் நடப்பதையும் தடுக்க முடியும்.

தமிழக அரசு: ஆனால், இந்த நடைமுறையை தமிழக அரசு திடீரென மாற்றிவிட்டது.. தமிழகத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 730 பஸ்கள் 15 ஆண்டுகள் நிறைவடைந்ததாக உள்ள நிலையில், மேலும் ஒரு வருடம் இவைகளை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதி தந்துள்ளது. அந்தவகையில், செப்டம்பர் 30, 2024 வரை 6,341 வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு, அண்ணா தொழிற் சங்க பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் அனுமதியை பெறாமலேயே இப்போது, தன்னிச்சையாக, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
உதிரி பாகங்கள்: தற்போது செயல்பாட்டிலுள்ள 18 ஆயிரம் பஸ்கள், நல்ல கண்டிஷனில் கிடையாது.. உதிரிபாகங்கள் கூட அரசு கொள்முதல் செய்யவில்லை. பழுதான வாகனங்களின் ஸ்பேர்பார்ட்ஸ்களை எடுத்து, பஸ்களுக்கு ஊழியர்கள் பொருத்தி வருகின்றனர். அதனால், பழைய பஸ்களை இயக்கும் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, புதிய பஸ்களை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், அரசு போக்குவரத்து கழக பணியாளர்களும் இதே கோரிக்கையை விடுக்க துவங்கி உள்ளனர்.. தற்போது பணிமனைகளில், டயர், ஸ்பிரிங் போன்ற உதிரிபாகங்கள் போதிய அளவுக்கு இல்லையாம்.. இந்த 15 வருடங்கள் பழமையான பஸ்களை உடனடியாக சீரமைத்து, எப்.சி. சான்றிதழ் வாங்க முடியாத சூழலும் உள்ளதால், அவைகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
உதிரி பாகங்கள்: ஆனால், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இதை பற்றி சொல்லும்போது, 1,777 பழைய பஸ்களில், 700க்கும் அதிகமான பஸ்களுக்கு பெரிய அளவில் பராமரிப்பு தேவையில்லை.. அவைகளில் 400க்கும் மேற்பட்ட பஸ்கள் தற்போது தயாராகி வருகின்றன. தேவையான உதிரி பொருட்கள் விரைவில் வாங்கப்பட்டு, மற்ற பஸ்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தந்துள்ளார்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications