ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்க முடியாது.. மறுத்த அரசு.. நாப்கின் வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சானிட்டரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் ஆரோக்கிய குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றுவதாகவும் அரசே ரேஷனில் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அரசு, சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.அதேநேரம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் வளரிளம் பெண்களுக்கு (10 முதல் 19 வயது வரை) விலையில்லாமல் வழங்கப்படுகிறது. அதேபோல் பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், பள்ளி செல்லாத இளம் பெண்களுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் அனைத்து மக்களுக்கும் ரேஷனில் மானியமாக அல்லது இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமி ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறுகையில், "மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஆரோக்கியம் பேணுவது மிகவும் அவசியம் ஆகும். ஆனால், சானிட்டரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் ஆரோக்கிய குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள். எனவே, ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், "ரேஷன் கடைகள் வாயிலாக நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். எனவே அப்படி ஒரு திட்டம் ஏதும் தமிழ்நாடு அரசிடம் இல்லை. கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும், பள்ளி மாணவிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்'' என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, அரசின் இந்த திட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாப்கின் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர்? பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்கள் எத்தனை பேர் உள்ளனர்? உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசும், மனுதாரரும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு. விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications