தலைமை செயலகத்தில் தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி மாற்றம்.. அரசு ஊழியர்கள் எதிர்ப்பு
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், துறை செயலாளர்கள் அலுவலகங்கள் இயங்கிவருகிறது. இதன் அருகே நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 தளம் கொண்ட கட்டிடத்தில் அரசின் 54 துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணியாற்றுகிறார்கள்.. இங்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு அரசு பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
தமிழ்நாடு அரசின் நிர்வாகம் 43 துறைகளைக் கொண்டிருக்கிறது. இந்தத் துறைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து செயல்படுகின்றன. சில அலுவலகலங்கள் மட்டும் அருகே உள்ள எழிலகத்தில் இயங்குகின்றன.

குறிப்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, உயர்கல்வித் துறை, நிதித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை,
பொதுப் பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைஉள்பட பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ளன
ஒவ்வொரு துறைக்கும் நிர்வாகத் தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இருப்பார். அவருக்கு கீழ் பல்வேறு அதிகாரிகள், உதவியாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஒரு சில பெரிய துறைகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் போன்ற கூடுதல் உயர் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். அனைத்து துறைகளுக்கும், தலைமைச் செயலகம் முழுமைக்கும் நிர்வாகத் தலைவராக தலைமைச் செயலாளர் இருக்கிறார். இவர் முதல்வரின் வழிகாட்டுதலின் படி செயல்படுவார்.
ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை தவிர, கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் செக்ரட்டரிகள் போன்ற பல நிலைகளில் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். ஒவ்வொரு துறை அமைச்சகமும் சென்னை தலைமைச் செயலகத்தில் தான் செயல்பட்டு வருகிறது. அதேபோல், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 தளம் கொண்ட கட்டிடத்தில் அரசின் 54 துறைகளின் அலுவலகங்கள் இருக்கிறது. அங்கு சுமார் 5 ஆயிரம் பேர் அரசு ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணிபுரிய வேண்டும்.
இந்த நிலையில் ஊழியர்களின் வருகை பதிவை டிஜிட்டல் முறையாக்கும் வகையில் முக அமைப்புடன் கூடிய பயோமெட்ரிக் வருகை பதிவு முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மை துறை அலுவலகத்தில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது. ஊழியர்கள் காலையில் பணிக்கு வந்தபோதும், மாலையில் வீடு திரும்பும்போதும் பதிவு செய்தனர். ஆனால் இந்த நடைமுறைக்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications