சென்னையின் வரப்பிரசாதம்.. இலவச மகளிர் பேருந்து.. புட்டு புட்டு வைத்த பெண்கள்.. நெகிழ்ந்த மாநகராட்சி
சென்னை: திமுக அரசு கொண்டுவந்த, மகளிர் இலவச பஸ் பயணம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதுகுறித்து சென்னை மாநகராட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இலவச பஸ் பயணத்துக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டதே அதற்கு சாட்சியாக உள்ளது.

இந்த இலவச பஸ் பயண அறிவிப்பினை எதிர்க்கட்சிகள்கூட அன்று கேள்வி கேட்டன.. வாக்குறுதியில் எத்தனையோ அறிவிப்புகளை சொல்லிவிட்டு, இந்த இலவச பஸ் பயணத்தை எதற்காக இத்தனை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்றும் விமர்சித்தன..
ஆனாலும், பெண்களுக்கு இப்படியான அறிவிப்பு அவசியம் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார்.. அதற்கான பலன்களையும் நடுத்தர மற்றும் ஏழ்மைநிலை பெண்கள் நேரடியாக பெற்றுவருகிறார்கள்.
முன்னோடி திட்டம்: அதனால்தான், ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில், சென்னை பெண்கள் என்ன நினைக்கிறார்கள் சென்னை பெண்கள்? என்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.. அதன்படி, மொத்தம் 3000 பேரிடம், இதுகுறித்து கருத்து கேட்டுள்ளது. இதில் 2432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். நூறு பேர் திருநங்கைகள்.
கருத்துக்கணிப்பில் வெளியான தகவல் இதுதான்: "89 சதவீத பெண்கள் போக்குவரத்திற்கு அரசு பஸ்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இந்த 89 சதவீத பெண்களில், 82 சதவீதம் பேர் அரசு வழங்கியிருக்கும் இலவச பஸ் பயணத்தின் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.. அதில் 42% பெண்கள் பஸ் பயணத்தின்போது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொந்தரவு: இவர்களில் 35% பெண்கள் சொல்லும்போது, பஸ்சில் ஏறும்போதும், பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் போதும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் 18-35 வயது வரம்புடைய பெண்கள் ஆவார்.
384 பெண்கள் பாலியல் தொந்தரவுகளை பஸ் பயணத்தின்போது சந்தித்திருப்பதாகவும் சொல்லி உள்ளனர். அவர்களில் 62% பேர் துணிச்சலாக தட்டி கேட்டதாகவும், ஆனால் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் கூட உதவிக்கு முன் வரவில்லை என்றும் ஆதங்கப்பட்டனர்.
பாதுகாப்பு சேவை: அதுமட்டுமல்ல இந்த அறிக்கையானது, பாதுகாப்பு சேவைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், பேருந்து அதிர்வெண்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது. மேலும் MTC பேருந்துகளில் பேனிக் பட்டன்களைப் பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது.
கிட்டத்தட்ட 60 சதவீதம் பெண்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாதுகாப்பு சேவைகள் குறித்து எதுவும் தெரியவில்லை. காவலன் செயலியை பற்றி 39% பெண்கள் மட்டுமே அறிந்திருந்தாலும், 31% பேர் பிங்க் போலீஸ் ரோந்து பற்றி அறிந்திருக்கிறார்கள். மேலும் 29% பேர் மட்டுமே MTC பேருந்துகளில் பேனிக் பட்டன்களை பற்றி அறிந்திருக்கிறார்களாம்.
பாலியல் தொல்லை: ஆக, மொத்தத்தில், இலவச பஸ் பயணம் ஒரு வரப்பிரசாதமாக இருப்பதாகவும், ஆனாலும், பஸ்களில் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வதாகவும், ஆய்வில் பொதுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக (எம்டிசி) பேருந்துகளில், நல்லது - கெட்டது என்று இரண்டுமே பெண்களுக்கு உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினக்கருத்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு மேயர் பிரியா சொல்லும்போது, "பெண்களுக்கு பஸ் பயணத்தில், என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்? என்னென்ன வசதிகள் செய்து தரவேண்டும் என அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது..
மேயர் பிரியா: கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரைகள் செய்யப்படும்.. பெண்களுக்காகவே பஸ்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவசரகால பொத்தான் பற்றிய விழிப்புணர்வை பெண் பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.. இப்போது அதிகமான பெண்கள் MTC பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக பேருந்துகள் முன்பை விட பாதுகாப்பாக உள்ளன" என்று என்றார்.
சென்னை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் சொல்லும்போது, இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னைதான் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டிலும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. அங்கு நிறைய தகராறுகள் தீர்க்கப்பட்டு ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. நாங்கள் பெண்களுக்கான பாதிக்கப்படக்கூடிய மண்டலங்களை வரைபடமாக்கி, அங்கு ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளோம்," என்றோம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications