கொரோனா நிவாரணம் 2ஆவது தவணை ரூ 2000, 13 மளிகை பொருட்கள் விநியோகம்.. தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நிவாரணத்தின் 2ஆவது தவணையான ரூ 2000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைக்கிறார்.
Recommended Video
திமுக தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரணமாக ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதிக்கு முதல் கையெழுத்து போடப்பட்டது.
அதில் முதல் தவணையாக ரூ 2000 கடந்த மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அது போல் அடுத்த தவணை ரூ 2000 வழங்குவது குறித்து நேற்று முன் தினம் முதல்வருடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா ஊரடங்கு
இந்த நிலையில் கொரோனா ஊடரங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் 3 வேளையும் வயிறார சாப்பிட வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

நலத்திட்ட உதவிகள்
இதையொட்டி திமுக பல நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் கொரோனா கால நிவாரணத் தொகை ரூ 2 ஆயிரத்தை இன்று முதல் முதல்வர் ஸ்டாலின் விநியோகம் செய்கிறார். இதற்கான டோக்கன் இன்று விநியோகம் செய்யப்படுகிறது.

13 பொருட்கள்
அது போல் 13 மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பும் இன்று முதல் வழங்கப்படுகிறது. சுமார் 2.09 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இவை வழங்கப்படுகிறது. நிர்வாக காரணங்களுக்காக துவரம் பருப்பு மட்டும் வரும் 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கும்.

என்ன பொருட்கள்?
13 பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- கோதுமை மாவு- 1 கிலோ
- உப்பு- 1 கிலோ
- ரவை- 1 கிலோ
- சர்க்கரை- 500 கிராம்
- உளுத்தம் பருப்பு- 500 கிராம்
- புளி- 250 கிராம்
- கடலை பருப்பு- 250 கிராம்
- கடுகு- 100 கிராம்
- சீரகம்- 100 கிராம்
- மஞ்சள் தூள்- 100 கிராம்
- மிளகாய் தூள்- 100 கிராம்
- குளியல் சோப்பு (125 கிராம்)- 1
- துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications