4வது நாளாக உண்ணாவிரதம்.. போராடும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்த முடிவு!
சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, நிதித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சம ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் சுமார் 4,000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

நான்காவது நாளாக நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தின்போது மயங்கி விழுந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை கர்ப்பிணிகள் உட்பட 70 மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டக்களத்தில் மயங்கி விழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் இதற்காக போராடியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு உடனடியாக தலையிட்டு, ஆசிரியர்களின் ஒற்றை கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அமலுக்கு கொண்டு வர அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வை கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, நிதித்துறை செயலாளர் ஆகியோர், ஆசிரியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நான்கு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications