சபாஷ்.. சாலையோர கடைகள், வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. நலவாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: சாலையோர கடைகள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், தனி நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் நல வாரிய தலைவராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 1 கோடி பேர் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சாலையோரங்கள், வாரச்சந்தைகள், கோவில் திருவிழாக்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், தலைச் சுமை மற்றும் தள்ளுவண்டியில் தெருக்களில் சென்று வியாபாரம் செய்பவர்கள் என்று சுமார் 5 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள், படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், கைவிடப்பட்ட முதியவர்கள், கைம்பெண்கள் என சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் பெரும்பாலானோர் சாலையோர வியாபார தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்தை வைத்துதான் அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
கந்து வட்டிக்கு கடன் பெற்று வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளை நிம்மதியாக தொழில் செய்யவிடாமல் உள்ளூர் ரவுடிகள் மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டது. மறுபுறம், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் சாலையோர கடைகளை அப்புறப்படுத்துவது, பொருட்களை அள்ளி வீசுவது, வியாபாரிகளை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும், சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளு வண்டிகளை வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கி மூலம் வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாலையோர கடைகள் மற்றும் வணிக நிறுவன வியாபாரிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் சாலையோர கடைகள் தெருவோர வியாபாரிகள் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் ஒழுங்குமுறை) சட்டம், 1982 (தமிழ்நாடு சட்டம் 33, 1982) இன் பிரிவு 6 இன் துணைப் பிரிவுகள் (3) மற்றும் (5) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு எண்.11(2)/LE/123(a-2)/2010 பிப்ரவரி 26, 2010 தேதியிட்ட தமிழ்நாடு அரசின் அரசிதழின் சிறப்பு பகுதி II-பிரிவு 2 இன் 2-3 பக்கங்களில் வெளியிடப்பட்டது.

சாலையோர வியாபாரிகள் நல வாரிய தலைவராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் இதன் மூலம் கீழ்கண்ட உறுப்பினர்களை தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தொழிலாளர் நல வாரியத்திற்கு நியமனம் செய்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த வாரியத்தின் தலைவராக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும், உறுப்பினர்களாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர், நிதித்துறைச் செயலர், தொழிலாளர் நலத்துறை ஆணையர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். அத்துடன் பணியாளர் தரப்பிலிருந்து 5 பேரும், தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 5 பேரும் என மொத்தம் 10 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications