சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசு இதை செய்யணும்.. பா.ஜ.க கூறிய அதே கோரிக்கையை வைக்கும் திருமாவளவன்!

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான மீதான மதிப்புக்‌ கூட்டு வரியினை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருக்குறள் பற்றிய புரட்சி நூல் - எனும் தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ECI இறையியல் கல்லூரியில் நடைபெற்றது.

உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி

இந்த விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நூலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், ' வள்ளுவரை ஓவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகிறார்கள்.

மதங்களை உருவாக்கவில்லை

மதங்களை உருவாக்கவில்லை

மதமும் கடவுளும் வேண்டாம் என வாழும் மனிதர்களின் தொகை பெருகிவருவதாக அண்மைக்காலத்து ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. சைவமும் வைணமும் ஆரிய மதம் அல்ல. இந்தியாவில் உள்ள 108 வைணவ கோயில்களில் 106 தமிழ்நாட்டில் தான் உள்ளது. பெரும்பாலான சைவ கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள் தமிழர்கள், ஆதிசங்கரர், இராமானுஜர் , மத்வர் ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள் மதங்களை உருவாக்கவில்லை.

சமூக நீதியை வென்றெடுக்க முடியாது

சமூக நீதியை வென்றெடுக்க முடியாது

தமிழர்கள் எனும் திராவிடர்கள் சமயம் தான் சைவ, வைணவ சமயங்கள், நம்மதங்கங்களின் மீதான ஆரிய ஆக்கிரமிப்புகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். கிருத்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான மத வெறுப்பு பிரச்சாரம் தற்போது நடைபெற்று வருகிறது. சனாதனத்தை எதிர்க்காமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது, அதற்கு திருக்குறளும் ஆயுதமாக இருக்கிறது, கிருஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையிலேந்தாமல் , திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக திகழும் என்று திருமாவளவன் கூறினார்.

 தமிழக அரசு மீது நம்பிக்கை

தமிழக அரசு மீது நம்பிக்கை

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது:- கடந்த சில வாரங்களாக திரிபுராவில் மிக மோசமான வான்முறையை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது பா.ஜ.க. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். உ.ப. சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மௌலவிகள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. எந்த மாநில அரசும் செய்வதற்கு முன்னதாக
ஏற்கனவே முந்தி கொண்டு டீசல் விலையை தமிழக அரசு குறைத்தது. அதே போல் பெட்ரோல் குறைப்பார்கள் என நம்புகிறோம்..

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர்

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர்

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர், அவர் ஒரு கிருஸ்தவராக இருந்து தான், திருக்குறள் நூலை எழுதி உள்ளார் என நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து அது ஆய்வுக்கு உரியது. பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தான் நீண்ட நாள் கோரிக்கை ,
அரசின் நலத்திட்டங்களை பெற முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக சாதி சான்றிதழ், இதர அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.

அரசின் திட்டங்களில் ஓன்று

அரசின் திட்டங்களில் ஓன்று

தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளில் குறவர்களை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது எனவே முதல்வர் உரிய புலனாய்வு இல்லாமல் அந்த மக்களை கைது செய்வதை தவிர்க்க உரிய செயல்திட்டத்தை முதல்வர் உருவாக்க வேண்டும். பூஞ்சேரி கிராமத்தில் முதல்வரின் நிகழ்சிகள் குதர்கமாக கருத்தில் கொள்ள வேண்டியவை அல்ல..பழங்குடியினருக்கு, பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்குவது அரசின் செயல்திட்டங்களில் ஓன்று. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

English summary
viduthalai chiruthaigal katchi leader Thirumavalavan has said that the Tamil Nadu government should reduce the value added tax on petrol and diesel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X