பந்தை மத்திய அரசு பக்கம் திருப்பி விடலாமா? சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே தொடங்கணும்: தினகரன்
சென்னை: சமூகநீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம், மத்திய அரசை எதிர் பார்க்காமல் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் திருவுருவ சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என கோரியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காத நிலையில், தன்னை நோக்கி வரும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசின் பக்கம் முதலமைச்சர் திருப்பி விட முயல்கிறாரோ? என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

மத்திய அரசின் உதவியின்றி மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கு பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் போது, திமுக அரசு சமூகநீதிக்கான அரசு என, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவது ஏன்?
சமூகரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையின் முதல் படி தான் இட ஒதுக்கீடு. அவ்வாறு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார விவரங்களை திரட்டி அவர்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் முழு நோக்கமாக பார்க்கப்படுகிறது.
நாட்டிலேயே முதல்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் பீகார் மாநில அரசு, அம்மாநிலத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்தி அதற்கான சட்டத்தையும் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாகவும், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு 13 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது. பீகாரில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் சட்டரீதியாக எவ்வித தடைகளும் இல்லை என்பதும் தெளிவாகிறது.
பீகாரை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்து அதற்கான பணிகள் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என அறிவித்திருக்கிறது. கர்நாடகா, ஒடிசா மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியிருக்கும் நிலையில் தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் தன்னிச்சையாகவே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு சுதந்திரமடைந்த பிறகும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் உரிய இடங்களை பெறமுடியவில்லை என்ற ஏக்கம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இன்றளவும் இருந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயமாகிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கும் அவர்களின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையை பிறப்பித்து, போதுமான நிதியை ஒதுக்கி, அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications