சென்னையில் 3 நாட்கள் டிரோன் பயிற்சி.. ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு ஸ்பெஷல் ஏற்பாடு!
சென்னை: தமிழக அரசின் சார்பில் சென்னையில் வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 3 நாட்கள் டிரோன் (Drone) பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்து, 18 வயது நிரம்பிய ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து டிரோன் பயிற்சி பெறலாம்.
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் பல்வேறு துறைகளில் தொழில்முனைவோர்களை உருவாக்கும் விதமாகவும், தொழில்முனைவோர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டிரோன் இயந்திரம் இயக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் ட்ரோன் பயிற்சி வரும் 18.03.2025 முதல் 20.03.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் ட்ரோன் விதிமுறைகள் & ட்ரோன் தொழில்நுட்ப அறிமுகம், ட்ரோன் ஒளிப்பதிவு நுட்பங்கள், வான்வழி புகைப்படம் எடுத்தல் பற்றிய கண்ணோட்டம், FPV ஒளிப்பதிவு DGCA இன் கீழ் விமான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு போன்றவை கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
இந்தப் பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032. 8668108141 / 8668102600 / 7010143022.
டிரோன் பயிற்சிக்கு 3 நாள் கட்டணமாக ரூபாய் 6000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிரோன் பயிற்சி பெறுவதற்கு முன்பதிவு அவசியம் என்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications