Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50% சுங்க பாக்கி கட்டணத்தை ஆக.15க்குள் செலுத்த முடிவு.. ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சுங்க கட்டணத்தில் ஆகஸ்ட் 15க்குள் 50% செலுத்தவும், மீதியை செப்டம்பர் மாதத்தில் செலுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளுக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.276 கோடி பாக்கி என சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் 4 நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

TN Government to Pay 50 Outstanding Toll Fees by Aug 15 Balance in September

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர், நான்குனேரி ஆகிய சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் 4 தனியார் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அதில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை நிலுவை வைத்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசுப் போக்குவரத்துக் கழகம் நிலுவைத் தொகையைச் செலுத்தாமல், பிரச்சனையை நீட்டித்துக் கொண்டேபோனால் நிலுவைத் தொகை ரூ.300 கோடி முதல் ரூ. 400 கோடிக்கு மேல் உயர்ந்துவிடும். சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்து போக்குவரத்தை நிறுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாது என்று கூறி 4 சுங்கச்சாவடிகள் வழியாக ஜூலை 10-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

எனினும், கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடந்த விசாரணையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்த உத்தரவை நிறுத்திவைத்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 2) மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என்றும் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பாதி கட்டணத்தையும், செப்டம்பருக்குள் மீதி கட்டணத்தையும் அரசு செலுத்தும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்த உத்தரவை ஆகஸ்ட் 21 வரை நிறுத்திவைப்பதாக கூறிய நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+