ஜூலை மாதம் வழங்கவேண்டிய நீரை வழங்க உத்தரவிடுங்கள்.. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!
சென்னை: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு 34 டிஎம்சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கமுடியாது என அவர் தெரிவித்தார்.

இது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்டா பாசனத்திற்கு தேவையான நீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா, மத்திய நீர்வளத்துறைக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜூலை மாதத்திற்குள் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும், அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி தண்ணீர் மற்றும், ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே போதுமானதாக இருப்பதால் அடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான டிகே சிவக்குமாரின் கருத்து - தமிழ்நாடு அரசின் கடிதம் ஆகியவை இரு மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications