4 நாள் பிளான்.. திடீரென தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆளுநர் ரவி.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தென் மாவட்டங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவரின் இந்த திடீர் சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 4 நாள் பயணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் ஆளுநர் ஆர். என் ரவி பார்வையிட உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக பதவி ஏற்றபின் ஆளுநர் ஆர்.என் ரவி பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். பதவி ஏற்று சில வாரங்களிலேயே இவர் டெல்லி பயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

முதல்வர்
அதேபோல் முதல்வர் ஸ்டாலினுடன் இரண்டு முறை சந்திப்பு நடத்தினார். அதோடு சென்னை வெள்ளத்தின் போது போன் மூலம் முதல்வரிடம் ஆளுநர் உரையாடினார். டெல்லியில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்தித்தார். இதில் அரசியல் குறித்தும், தமிழ்நாடு எல்லை பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

சந்திப்பு
அதன்பின் தமிழ்நாடு வந்தவர், பாஜக தலைவர் அண்ணாமலை, எச். ராஜா போன்ற தலைவர்களையும் சந்தித்தனர். இதெல்லாம் போக நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை சென்று நேரில் சந்தித்துள்ளார். மாரிதாஸ் கைது, பாஜகவிற்கு நெருக்கமானவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்ததாக கூறப்பட்டது. புகார் ரிப்போர்ட் ஒன்றை ஆளுநரிடம் அண்ணாமலை இந்த சந்திப்பில் அளித்துள்ளார்.

பயணம்
இந்த நிலையில்தான் இன்றில் இருந்து ஆளுநர் ஆர். என் ரவி தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவரின் இந்த திடீர் சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்து கொள்கிறார். 4 நாட்களுக்கு இந்த பயணத்தை ஆளுநர் மேற்கொள்ள இருக்கிறார்.

ஆளுநர்
சமீபத்தில் திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலில் வழிபாடு நடத்திய ஆளுநர் இந்த சுற்றுபயணத்தின் போதும் பல்வேறு தென் மாவட்ட கோவில்கள் சுற்றுலா தளங்களை பார்வையிட உள்ளார். இதை தவிர்த்து பொதுவாக ஆளுநர் அரசின் செயல்பாடுகளில் நேரடி தலையீடு மேற்கொள்ள அதிகாரம் கிடையாது. நிர்வாக கூட்டங்களை நடத்தினாலோ, சோதனைகள் செய்தாலோ அது சர்ச்சையாகும். இதனால் ஆளுநரின் இந்த தென் மாவட்ட பயணம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலையுடன் நடந்த சந்திப்புக்கு மறுநாளே இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் இது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications