Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது.. பெரியார், காமராஜர் விருது யாருக்கு? தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2026 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகள் அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன.

TN Govt Announces Anna Award for Minister Durai Murugan Periyar and Kamarajar Awards Also Declared

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- பன்னெடுங்காலமாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிவரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத் தகுந்தது. அவ்வகையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர்.

அய்யன் திருவள்ளுவர் விருது

திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தெரிவு செய்து திருவள்ளுவர் விருது 1986-ஆம் ஆண்டுமுதல் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். அவ்வரிசையில் 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் பரப்பும் பெரும் பணியைச் செய்து வருகிறார். தனது கருத்தை ஆழமாகவும், அதே நேரத்தில் துணிச்சலுடனும் மாற்றார் வைக்கும் வாதங்களை வலிமையாக மறுக்கும் வகையிலும் மேடைகளில் முழங்கி வரும் வழக்கறிஞர் திருமிகு அ.அருள்மொழி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் விருது

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 27 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கான விருது திரு.சிந்தனைச் வழங்கப்படுகிறது.

அவ்வரிசையில் செல்வன் 2025-அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கரின் சமநீதி, அரசியலமைப்புச் சட்ட நெறிகள், சமூகநீதி ஆகியவை குறித்து அழகாகவும், ஆழமாகவும் தமிழ்நாட்டு மேடைகளிலும், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் முழங்கி வருபவர் திரு.சிந்தனைச் செல்வன் அவர்கள். விளிம்புநிலை மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் முதல் குரல் எழுப்பக் கூடியவர்.

அவர்களது முன்னேற்றத்துக்கான அனைத்து முயற்சிகளையும் உடனடியாகச் செய்யக் கூடியவர். தனிப்பட்ட முறையிலும் கூட்டியக்கம் மூலமாகவும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக உழைத்து வருபவர் இவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அக்கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். திரு. சிந்தனைச் செல்வன் அவர்கள் இந்த ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது பெறுகிறார்.

திருக்குறளின் அறக்கருத்துகளை செந்தமிழில் எழுதியவர்

விடுதலைப் போராட்டத் தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் காமாட்சி இணையரின் புதல்வரான இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மின்னியலில் பட்டம் பெற்றவர். தமிழ்மறைக் குடமுழுக்குகள் 1400-க்கு மேல் நடத்தி இருக்கிறார். தமிழாகமத் திருமணங்கள் 3000-த்துக்கு மேலும் நடத்தியவர். அறநிலையத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்தவர். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்.

சைவ சித்தாந்த நுண்பொருளுடன் திருக்குறளின் அறக்கருத்துகளைச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழ்நாட்டில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைத் திருக்குறள் நெறியுடன் பரப்பி வரும் சைவசித்தாந்த அறிஞர். நுண்மாண் நுழைபுலம் கொண்ட முதுமுனைவர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் திருவள்ளுவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தை பெரியார் விருது

சமூகநீதி கிடைக்கப் பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது வழக்கறிஞர் திருமிகு அ.அருள்மொழி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

பள்ளிப் பருவம் முதல் பெரியார் இயக்க மேடைகளில் முழங்கத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து வருகிறார் வழக்கறிஞர் திருமிகு அ.அருள்மொழி சுயமரியாதை. சமூகநீதி, பெண் விடுதலை, அரசியலமைப்பு சட்டக் கோட்பாடுகள் ஆகியவை குறித்து தமிழ்நாட்டு மேடைகளில் அதிக காலம் பேசிவருபவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். பெரியாரியலுடன் சேர்ந்து பாவேந்தரின் கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

துரைமுருகனுக்கு அண்ணா விருது

தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்குப் பேரறிஞர் அண்ணா விருது 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது மாண்புமிகு அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவப் பருவ காலம்தொட்டு தமிழ் இயக்கத்தோடும், திராவிட இயக்கத்தோடும் பயணிக்கத் தொடங்கியவர். 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போராட்டத்தில் பங்கெடுத்தவர். பேரறிஞர் அண்ணா அவர்களால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவர். மாணவப் பருவம் முதலே தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டிகளிலும் பரிசுகளைக் குவித்தவர். இலக்கியம், அரசியல், சமூகம், இசை, நாடகம், பொருளாதாரம் என எப்பொருளிலும் மணிக்கணக்கில் உரையாற்றும் ஆற்றல் பெற்றவர்.

முதன்முதலில் 1971-இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இதுவரை 10 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது நீர்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் அவை முன்னவராக இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் கண்ணியம் காக்கும் மாண்பாளராகச் செயல்படும் மாண்புமிகு அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+