"டோல் முருகன்"தான்.. அத்துமீறிய கள்ளக்குறிச்சி சுங்க சாவடி.. ஆன் த ஸ்பாட்டில் அலறவிட்ட வேல்முருகன்!
சென்னை: தமிழ்நாடு அரசு உறுதி மொழி குழுவினரிடம் அத்துமீறியதால் கள்ளக்குறிச்சி சுங்க சாவடியில் வாகனங்களை கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்க அக்குழுவின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சுங்க சாவடிகள் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வருகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது அதன் அடையாளமாக சுங்க சாவடிகளை மறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்துவதும் வழக்கம்.

கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அக்கட்சியினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. இதனையடுத்து சுங்க சாவடியை தாக்க சொன்னதாக வேல்முருகன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து கடந்த வாரம் வேல்முருகன் எம்.எல்.ஏ., சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

தற்போது பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் தமிழ்நாடு அரசின் உறுதி மொழி ஆய்வுக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார் வேல்முருகன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசு பணிகளை இந்த குழு ஆய்வு செய்து வருகிறது. இக்குழுவானது இன்று கடலூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் வேல்முருகனை வரவேற்றனர்.

இப்பயணத்தின் போது கள்ளக்குறிச்சி சுங்க சாவடி ஊழியர்கள், தமிழ்நாடு அரசின் உறுதி மொழி ஆய்வுக் குழுவினரிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுங்கச் சாவடியில் கீழே இறங்கிய வேல்முருகன், அங்கு விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் அரசு உறுதி மொழி ஆய்வுக் குழு தமது ஆய்வை முடித்துவிட்டுச் செல்லும் வரை கள்ளக்குறிச்சி சுங்க சாவடியில் எந்த ஒரு வாகனத்துக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி சுங்க சாவடியில் பல மணிநேரமாக வாகனங்கள் கட்டணம் செலுத்தாமலேயே சென்று வருகின்றன.

-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications