ஒரே வார்த்தையில் அசரடித்த திமுக.. குளிர்ந்து போன "டெல்லி".. திகைத்து போன பாஜக.. பூரித்த விவசாயிகள்
வேளாண் பட்ஜெட் டெல்லி விவசாயிகளுக்கு காணிக்கையாக்கப்பட்டுள்ளது
சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
முன்பு மாதிரி இல்லை, இப்போது அரசின் கடன் சுமை அதிகரித்துவிட்டது.. இதற்கான காரணங்களை அமைச்சர்கள் விலாவரியாக தெரிவித்திருந்தாலும், கடன் சுமையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு உள்ளது.
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.. அதன்படி, நேற்றைய தினம் பொது பட்ஜெட்டும், இன்றைய தினம் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தனி பட்ஜெட்
கர்நாடகா, ஆந்திரா ஆகிய 2 மாநிலங்கள் இதற்கு முன்பு வேளாண் துறைக்கான தனிப் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளன... என்றாலும் நமக்கு இது ரொம்பவும் ஸ்பெஷல் பட்ஜெட் ஆகும்.. விவசாயத்தையே அடிப்படையாக கொண்ட நம்முடைய மாநிலத்துக்கு இது பெருமைக்குரிய ஒன்றாகும்.. இதை திமுக அரசு செய்துள்ளது விவசாயிகளின் நன்மதிப்பை மேலும் பெற்றுள்ளது.

வேளாண் பட்ஜெட்
முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை தனியாக சமர்ப்பிப்பதால், திமுக இதற்காக பிரத்யேக நடவடிக்கைகளை முன்னதாகவே மேற்கொண்டது.. குறிப்பாக, விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன... மாவட்ட வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகப்பிரிவு அதிகாரிகளும் பல்வேறு திட்டங்களை சம்பந்தமாக தெரிவித்தனர்...

டெல்டா விவசாயிகள்
இதுபோக டெல்டா விவசாயிகள் தங்களின் வேண்டுகோள்கள், தேவைகள், கோரிக்கைகளையும் தனித்தனியாக, மாவட்ட வாரியாகவும் தமிழக அரசுக்கு தெரிவித்தபடியே இருந்தனர்.. இதுபோக, அமைச்சர்களை தங்கள் தொகுதிகளில் சந்தித்த விவசாயிகள், மேலும் சில நடைமுறை பிரச்சனைகளையும் எடுத்து சொல்லியே வந்தனர்.

வரவேற்பு
இப்படிப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், இரவு, பகலாக பணியாற்றி, ஏராளமான திட்டங்களுக்கு வேளாண் துறை உயர் அதிகாரிகள் இறுதி வடிவம் கொடுத்துள்ளனர்... இப்படியான சிறப்பு திட்டங்கள்தான், நம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று நம்பப்படுகிறது.

டெல்லி விவசாயிகள்
பிரத்யேக வேளாண் பட்ஜெட் என்றதுமே, பரவலாக மனதில் தோன்றியது டெல்லி விவசாயிகள் போராட்டத்தை பற்றிதான்.. இந்த ஒரு வருடமாகவே அந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே கலங்கடித்து வருகிறது.. உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் , 2020 ஆகிய 3 சட்டங்கள் பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்து உள்ளன...

கோரிக்கைகள்
இந்த சட்டத்தை திரும்ப பெற கோரி, மழை, வெயில், பனி, குளிர், வெயில் என எந்தவித இயற்கை சீற்றங்களுக்கும் அஞ்சாமல் தங்களின் 3 விதமான கோரிக்கைகளில் மட்டுமே உறுதி காத்து வரும் விவசாயிகள் நெஞ்சுரம் மலைத்து பார்க்கப்பட்டு வருகிறது. அறவழியில் அமைதியாக போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் உணர்வுகளை, திமுக உணராமல் இல்லை.. அதனால்தான், டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக ஒருநாள் போராட்டத்தையும் நடத்தியது.

பாஜக
"விவசாயிகளின் மகத்தான போராட்டத்தை சரியாக மதிப்பிடாமல் அவமதித்துவரும் மத்திய பாஜக அரசின் அணுகுமுறை தவறானது என்றும், மத்திய அமைச்சர்களின் பிற்போக்கு தனமான கருத்தையும் கண்டிக்காமல் - இருக்கும் முதல்வர் பழனிசாமியின் சுயநலப் போக்கு மிகுந்த கவலைக்குரியதும், கண்டனத்திற்கும் என்றும் ஸ்டாலின் காட்டமாக அப்போது கூறியிருந்தார்...

போராட்டம்
அதுமட்டுமல்ல, "விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக எந்த வழக்கை வேண்டுமானாலும் போடுங்கள்... அதை சந்திக்க நாங்கள் தயார். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காக எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்" என்று ஸ்டாலின் அன்று சொன்ன வார்த்தையை எளிதாக மறந்துவிட முடியாது.

ஆதரவு
அவ்வளவு ஏன், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தும்கூட, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றும் மத்திய வேளாண் சட்டங்களை ஒருபோதும் திமுக அரசு ஏற்காது என்றும் ஏற்கனவே அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஒருமுறை கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில்தான், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தன்னுடைய துவக்க உரையில் தெரிவித்துள்ளார்..

காணிக்கை
தன்னுடைய உரையில், "வேட்டையாடி திரிந்த மனிதனை நிலத்தில் ஊன்றி நாகரிகப்படுத்தியது வேளாண்மைப் புரட்சி... 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த புரட்சியே மனிதனாக மாற்றியது. தன் உணவை தானே உற்பத்தி செய்யும் திறனை அடைந்தது. வேளாண்மையே மனித நாகரீகம் பன்மடங்கு உயர்ந்தாலும் உணவின்றி உயிர் வாழ இயலாது" என்றார்.

விவசாயிகள்
இதன்மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக எப்போதுமே துணை நிற்கும் என்பதுடன், விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் போக்கை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்பதும் நிரூபணமாகி உள்ளது... ஒரு மாநிலத்தின் சட்டசபை பட்ஜெட்டை, விவசாயிகளுக்கு சமர்ப்பிப்பது என்பது வேறு எங்கும் நடக்காத வரலாறு.. அந்த வகையில், திமுக அரசின் இன்றைய சமர்ப்பணம், டெல்லி விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலையும், நம்பிக்கையும் தரும் என்று நம்பப்படுகிறது.
-
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications