சென்னை உட்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (6.12.2023) விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

ஏற்கனவே திங்கள், செவ்வாய் என 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் 3வது நாளாக நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TN govt has declared a holiday for all schools and colleges in Chennai, Chengalpattu, Tiruvallur and Kanchipuram district on December 6

மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் மிக் ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு;

'மிக்ஜாம்' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (4.12.2023) இன்றும் (5.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாளை (6.12.2023) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+