சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. அரசின் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி 85 ரூபாயாம்.. எங்கெங்கே தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மக்கள் தொட முடியாத உச்சத்தில் உள்ளது. இதற்கு மத்தியில் காய்கறி விலையும் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வேளையில் தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு

தமிழகத்தில் 1 கிலோ தக்காளி விலை 150-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.20, ரூ.30 என விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் ராக்கெட் வேக விலை பொதுமக்களுக்கு குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

தக்காளிக்கு வந்த வாழ்வு

தக்காளிக்கு வந்த வாழ்வு

கடைகளுக்கு சென்று தக்காளி விலையை கேட்டதும் தக்காளி வாங்காமல் வெறும் கையுடன் திரும்பி விடுகின்றனர் இல்லத்தரசிகள். ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்வது வருவதால் இதன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் ஆறுதல்

தமிழக அரசின் ஆறுதல்

தக்காளி விலையேற்றம் தொடர்பான மீம்ஸ்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கொடி கட்டி பறக்கின்றன. ''இனிமே தக்காளி ரசம் வைப்பதற்கு லோன் வாங்கணும் போலயே'' என்று இல்லத்தரசிகள் புலம்பி தவிக்கின்றனர். இந்த நிலையில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் விற்பனை

குறைந்த விலையில் விற்பனை

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. இதனால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

65 பண்ணை பசுமை கடைகள்

65 பண்ணை பசுமை கடைகள்

இதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 ரூ.85 முதல் விற்பனை

ரூ.85 முதல் விற்பனை

இவற்றின் மூலம் குறிப்பாக வெளிச்சந்தையில் தற்போது ரூ. 110 முதல் ரூ130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி, கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். இதற்காக, முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 MT தக்காளி கொள்முதல் செய்யவும், இதனை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

English summary
Tamil Nadu government has said that steps have been taken to sell tomatoes at lower prices in farm green shops as the price of tomatoes is rising
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X