காவிரி ஆணைய கூட்டம்: மேகதாது குறித்து விவாதிக்க தமிழக அரசு எதிர்ப்பு- சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல்
சென்னை: டெல்லியில் நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜூன் 17-ந் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுகிற கர்நாடகாவின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், மேகதாது அணை குறித்து விவாதிக்கவோ, அதற்கு ஒப்புதல் அளிக்கவோ காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்படக் கூடாது. வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து மேகதாது விவகாரம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும். அதேபோல், மத்திய அரசும் மேகதாது வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

தமிழக அரசு நிலை
இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த போது, மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா கைவிட ஆலோசனை வழங்க கேட்டுக் கொண்டார். பின்னர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த போது மேகதாது அணைக்கு அனுமதி தரக் கூடாது என நான் வலியுறுத்தினேன்.

மத்திய அரசு உறுதி
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 12-ந் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அனைத்து கட்சி உறுப்பினர்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கடந்த ஆண்டு ஜூன் 16-ல் நேரில் வழங்கினர். அப்போது தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அனுமதியும் மேகதாது திட்டத்துக்கு அளிக்கமாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது.

பிடிவாத கர்நாடகா
ஆனால் கர்நாடகா அரசு பட்ஜெட்டில் மேகதாது அணைக்கு ரூ1,000 கோடி நிதி ஒதுக்கியது. இதை எதிர்த்து தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மேகதாது விவகாரம் உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ளதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் இதனை விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தினோம். அதனால் இந்த விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

காவிரி ஆணையம் வரம்பு மீறல்
இந்நிலையில் வரும் 17-ந் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என கடந்த மே 25-ல் கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4-ந் தேதி தமிழக அரசு தமது கடிதத்தில், மேகதாது குறித்து விவாதிக்க அதிகாரம் உள்ளது என்பது உச்சநீதிமன்றம் 18.05.18 உத்தரவுக்கும், மத்தியரசின் காவிரி ஆணைய வரம்புகள் குறித்த அறிவிப்புக்கும் எதிரானது; ஆகையால் இதனை விவாதப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் எதிர்ப்பும் வழக்கும்
மேலும் தமிழக அரசின் உறுப்பினர் நடைபெற உள்ள 16-வது கூட்டத்தில், மேகதாது அணை குறித்த விவாதப் பொருள், ஆணைய எல்லைக்கு அப்பாற்பட்டு உள்ளது; இது குறித்து விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை உறுதியுடன் தெரிவிப்பார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் வரம்பை மீறி மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்க கூடாது என ஆணையிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசால் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து காவிரி பாசன விவசாயிகள், தமிழக மக்கள் நலன்கள், உரிமைகளை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை உறுதியுடன் எடுக்கும். இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications