அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் கிடையாது! வெளியான அரசாணை!
சென்னை: லஞ்சம், ஊழல், முறைகேடு உள்ளிட்ட புகார்களில் சிக்கும் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நாளில் பணி இடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நாளில் அவர்களை சஸ்பெண்ட் செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் தொடங்கி அலுவலக உதவியாளர் வரை பல்வேறு நிலைகளில் அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக இருக்கிறது. அவர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பணியாற்றிய காலத்திற்கு ஏற்ப ஓய்வூதியம், பணப்பலன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் பணியாற்றும் காலத்தில் லஞ்சம், ஊழல், முறைகேடு மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆளானால் பணி ஓய்வு பெறும் நாள் அன்று சில அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பல பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.

அரசு ஊழியர்கள்
இதனால் அரசு ஊழியர்கள் மன உளைச்சலுக்கும் ஆளானார்கள். சமீபத்தில் கூட ஒரு பிரபல பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பணி ஓய்வு பெறும் நாள் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.
பணி இடைநீக்கம்
முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. மனித வள மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த அந்த அரசாணையில், அரசு ஊழியர்கள் தவறு செய்து அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. நீண்ட காலம் விசாரணை நடக்கும் போது நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறியிருந்தது.
ஓய்வூதியம் பணப்பலன்கள்
மேலும், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் போது ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் புகார் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருக்கிறதா, பணி நீக்கம் செய்வதற்கு உரியதா என்பது குறித்து ஆராய வேண்டும். ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன் ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால் பணியிடை நீக்கம் செய்யலாம்.
அரசு உத்தரவு
முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை 3 மாதங்களுக்குள் முடிக்காமல் விசாரணை அதிகாரி தாமதப்படுத்தியிருப்பது தெரியவந்தால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதன்படி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது, அதற்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள், ஆனால், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிந்தபிறகே பணப்பலன்களைப் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications