அடியோடு மாறுது.. கிண்டிக்கு வரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.. அரசாணை வெளியீடு!
சென்னை: சென்னை ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே ராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வரும் ஆட்சியர் அலுவலகம், கிண்டிக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
தென்சென்னை வருவாய் கோட்டத்தில் உள்ள கிண்டியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட 1.43 ஹெக்டேர் நிலத்தினை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த மாளிகையில் 10 நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வளாகத்தில் புதிய பல அடுக்கு நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராஜாஜி சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான இடநெருக்கடிகள் மற்றும் போக்குவரத்து சிக்கல்களை மீண்டும் மீண்டும் மதிப்பாய்வுகள் செய்து எடுத்துக்காட்டியதை அடுத்து, அதிகாரிகள் இந்த மாற்றத்தை முடிவு செய்துள்ளனர்.
கூட்ட நெரிசல்
ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் மேற்பட்ட மனுக்கள் மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகின்றன. இதனால் எந்த நேரமும் அதிக கூட்டம் இருக்கும். இந்த வளாகம் எப்போதுமே கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் குறைகள், நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகப் பணிகளை சீராகக் கையாள்வதைத் தடுக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
கிண்டியில் அமைய உள்ள புதிய ஆட்சியர் அலுவலகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒன்றிணைத்து, பொது காத்திருப்பு அரங்குகள், விசாரணை அறைகள் மற்றும் டிஜிட்டல் சேவை கவுண்டர்கள் போன்ற மேம்பட்ட வசதிகள் கொண்டதாக இருக்கும்.
கிண்டியில் புதிய ஆட்சியர் அலுவலகம்
அதன்படி, கிண்டியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்ட தேவையான 1.43 ஹெக்டேர் நிலத்தினை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அரசாணைப்படி நில ஆவணங்களில் ஒரு மாதத்திற்குள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிண்டியில் உள்ள இடம் சிறந்த சாலை, ரயில் மற்றும் மெட்ரோ இணைப்புடன் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் இருப்பதாக கருதப்படுகிறது. கிண்டியில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் முடியும் வரை எம். சிங்காரவேலர் மாளிகையில் தற்போதைய செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications