Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“தீபம் ஏற்ற வந்தமாதிரி தெரியல.. சொத்தில் உரிமை கேட்பது போல வந்துள்ளார்”.. அரசு தரப்பு வைத்த வாதம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: "மனுதாரர் இந்த வழக்கில் பக்தராக வரவில்லை. சொத்தில் உரிமை கேட்பது போல வந்துள்ளார். இது தீபம் ஏற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கா அல்லது சொத்துரிமை கேட்டு தொடரப்பட்ட வழக்கா எனத் தெரியவில்லை" என திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பு வாதம் வைத்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாம்கிநாதன் உத்தரவுப்படி தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோர் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

thirupparankundram high court temple

இந்த உத்தரவை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி இறுதி வாதத்தை முன்வைத்தார்.

"மனுதாரர் இந்த வழக்கில் பக்தராக வரவில்லை. சொத்தில் உரிமை கேட்பது போல வந்துள்ளார். இது தீபம் ஏற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கா அல்லது சொத்துரிமை கேட்டு தொடரப்பட்ட வழக்கா எனத் தெரியவில்லை" என அரசுத் தரப்பு வழக்கறிஞர் இன்று வாதங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்த அரச பாண்டி தரப்பு, ராம ரவிக்குமார் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிக்கந்தர் தர்காவில் அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. அதைப்போன்று கோவில் நிர்வாகம் சார்பில் இங்கு தீபம் ஏற்ற வேண்டும் என வாதத்தை முன்வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, தர்கா தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தில், இதுபோன்ற விவகாரங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது 2 நீதிபதிகள் அமர்வு.

மேலும், தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளைக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+