தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர் தேர்தல்! அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
இது குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தரப்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு;

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் 03.10.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற உள்ளது. தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய விரும்புகின்ற வாக்காளர்கள் (முத்தவல்லிகள்) தேர்தல் அலுவலர் அல்லது தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் அல்லது வக்ஃப் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலிருக்கும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, அந்தந்த பகுதிகளைச் சார்ந்த மண்டல வக்ஃப் கண்காணிப்பாளர்களிடம் (Zonal Superintendent of Waqfs) தங்களின் அடையாளத்திற்கான சான்று பெற்று 25.09.2023 (திங்கள்கிழமை) அன்று மாலை 5.00 மணி வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தேர்தல் அலுவலரிடம் (Returning Officer) சேர்ப்பிக்க வேண்டும்.

Tn Govt released the notification regarding the election for the members of Muthawalli Division of Tamil Nadu Waqf Board.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டு வாக்காளர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட தபால் ஓட்டுகள் தேர்தல் அலுவலரின் அலுவலகத்திலுள்ள பெட்டியில் போடலாம் அல்லது தபால் மூலமாக 03.10.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 3.00 மணிக்குள் தேர்தல் அலுவலரிடத்தில் சேரும் விதமாக அனுப்ப வேண்டும்.

தபால் ஓட்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை தேர்தல் அலுவலர் அல்லது தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் அல்லது மண்டல வக்ஃப் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9ன் அதிகாரபூர்வ வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+